Lyrics -Bharathiyar
யாதுமாகி நின்றாய்-காளி!
எங்கும் நீ நிறைந்தாய்;
தீது நன்மை யெல்லாம்-காளி!
தீது நன்மை யெல்லாம்-காளி!
தெய்வ லீலை யன்றோ;
பூதமைந்தும் ஆனாய்-காளி!
பொறிக ளைந்தும் ஆனாய்;
போத மாகி நின்றாய்-காளி!
போத மாகி நின்றாய்-காளி!
பொறியை விஞ்சி நின்றாய்
யாதுமாகி நின்றாய்-காளி!
இன்பமாகி விட்டாய்-காளி!
என்னுளே புகுந்தாய்
பின்பு நின்னை யல்லால்-காளி!
பின்பு நின்னை யல்லால்-காளி!
பிறிது நானும் உண்டோ?
யாதுமாகி நின்றாய்-காளி!
அன்பளித்து விட்டாய்-காளி!
ஆண்மை தந்து விட்டாய்;
துன்பம் நீக்கிவிட்டாய்-காளி!
துன்பம் நீக்கிவிட்டாய்-காளி!
தொல்லை போக்கிவிட்டாய்
யாதுமாகி நின்றாய்-காளி!
எங்கும் நீ நிறைந்தாய்;
தீது நன்மை யெல்லாம்-காளி!
தீது நன்மை யெல்லாம்-காளி!
தெய்வ லீலை யன்றோ;
தெய்வ லீலை யன்றோ;
யாதுமாகி நின்றாய்-காளி!
~~~*~~~
0 comments:
Post a Comment