சிறுவாப்புரி முருகன் பதிகம் - Siruvapuri Murugan Pathigam


சிறுவாப்புரி முருகன் பதிகம்
Siruvapuri Murugan Pathiigam
Sontha Veedu Pera


சிவனாரின் பிள்ளை கணநாத வள்ளல் திருப்பாதம் முந்தி தொழுது
புவியாளக் குன்றம் தணிலாடும் வேலன் புகழ்பாட நல்ல தமிழை

சுவையோடு தந்து நிறைவாக செய்ய துணையாக வேண்டும் எனவே
கவிபாடி வேண்டி கசிந்தேந்துகின்றேன் கணநாதன் எந்தன் துணையே

கல்லாத பேர்க்கும் கவிபாடும் ஆற்றல் கடல்போல தந்து விடுவான்
வெல்லாத கோழை வெகு வீரனாக விதிமாற்றி வைத்து விடுவான்....

கவிபாடி வேண்டி கசிந்தேந்துகின்றேன் கணநாதன் எந்தன் துணையே
வெல்லாத கோழை வெகு வீரனாக விதிமாற்றி வைத்து விடுவான்

நில்லாத செல்வம் நிலையாக இல்லில் நிதம் கூட செய்து விடுவான்
செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே

எனக்காக இல்லம் இலையே என்றேங்க எழில் வீடு ஐயன் தருவான்
பணக்காரன் என்றும் பரதேசி என்றும் பார்த்தாள எண்ணி யறியான்

தனைக்கான வந்து தமிழ்பாடும் அன்பர் துணையாக என்றும் வருவான்
தினைக்காட்டு வள்ளி தனைநாடும் வள்ளல் சிறுவாபுரிக் குமரனே.....

நெல்லோடு வாழை நிறைவோடு சூடும் நிலமோங்கும் நல்ல பதியாம்
வில்லேந்தும் ராமர் வைதேகி பாலர் வென்றாடி நின்ற இடமாம்....

பொல்லாத சூரன் புரமோட்டி வேலன் பொழுதோடு தங்கும் இடமாம்
செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
.
தவமோங்கு தந்தை செவியோடு பேசி சதுர்வேதம் சொல்லிவிடவே
சிவசாமி நீயும் தென்சாமி மலையில் திருவீடு கொள்ளவிலையோ

புவிவாழும் யானும் புதுவீடு ஒன்றில் புகவேணும் நல்ல குடியே
சிவபால தேவன் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே

எட்டாத வானோர் எழிலான வீட்டில் எக்காளமிட்டுப் புகுந்து
கொட்டாடும் சூரன் குலநாசமாகக் கூர்வேலைத் தொட்ட குமரன்

தட்டாமல் தேவர் தன்வீடு தன்னில் தானாள விட்ட குகனாம்
செட்டாய் எனக்கும் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே

சூராதி சூரன் தூளாகிப் போக ஜெகமேவு தேவர் மகிழ்ந்து
காராருங் கூந்தல் தெய்வானை தன்னை கல்யாணம் செய்து தருவார்

ஏராரும் வேலன் இல்வாழ்க்கை காணும் இனிய பரங்குன்றம் எழிலாம்
சீராய் எனக்கும் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே

ஒரு யானை போன்ற கணநாத வள்ளல் ஒப்போடு அன்று உதவ
குறமாது தன்னை மணமாலை சூடிக் கொண்டாடும் இன்ப நினைவில்

தருமேவு நல்ல தணிகாசலத்தில் தனிவீடு கொண்ட குகனாம்
சிறியேன் எனக்கும் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே

சிறகாட வானில் பறந்தாடும் புள்ளும் சிறுகூடு கட்டி வளரும்
குறியாய்ப் பணத்தை கொள்ளாது விட்ட அறியாத பிள்ளை எனையும்

உறவோடு என்றும் ஒப்போடு காண உடனோடி வந்து அருளி
சிறியேன் எனக்கும் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே

ஏராள செல்வம் இருந்தாலும் எல்லாம் எல்லார்க்கும் வாய்ப்பதிலையே
பாராளும் கந்தன் பார்த்தாலே கிட்டும் பாரோங்கும் இன்ப நிலையே

ஊராரும் போற்றும் பேரோடு வாழ உடனோடி வந்து அருளி
சீரான இல்லம் தோதாய் அருள்வான் சிறுவாபுரிக் குமரனே

மெய்பேச வாழ்வில் விளையாது துன்பம் விதி கூறும் உண்மை இதுவே
பொய் பேசி செல்வம் புகழோடு யாரும் புவி வாழ்ந்ததென்றும் இலையே

கையாற வேலன் கால்தேடி பற்ற கவினாடும் இன்ப நிலையே
தெய்வானை நாதன் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே

இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே
செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே

தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே
அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே.

~~*~~*~~*~~

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

1 comments:

Saraswathi Devotional Songs Lyrics

.

Devi Devotional Songs Lyrics

.

SPB Tamil Devotional Songs