Chettinad Bhajan Lyrics - Murugan
Alli Kodupathil Vallamai Petravan Song Lyrics
அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் - பாடல் வரிகள்
அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் – தினம் அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன் அப்பன் பழனியப்பன் கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம் காவலில் நின்றிருப்பான் – அங்கு கால்நடை யாய்வரும் மானிட ஜாதியைக் கண்டுகளித்திருப்பான். துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு ஜோதிப் பிழம்புமுண்டோ? – அந்த சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை சொல்ல மொழியுமுண்டோ! வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின் வேறொரு சொர்க்கமுண்டோ? – ஆண்டி வேஷத்திலாயினும் வீரத்திலாயினும் வேலனை வெல்வதுண்டோ! சித்தர் வணங்கிய சேவற் கொடியோனைச் சேர்ந்து வணங்கிடுவோம் – அந்த சிக்கலிலாயினும் செந்திலிலாயினும் சென்று கனிந்து நிற்போம்! பக்தருக்கென்று திறந்திருக்கும் தென் பழனியைக் கண்டுகொள்வோம் – அங்கு பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும் செய்து பணிந்திடுவோம்! செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன் தண்டாயுத மல்லவோ – அந்த சித்திர வள்ளியும் சாடையில் மற்றொரு செட்டி மகளல்லவோ! கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட கோஷ மிட்டோடிடுவோம் – முள்ளும் குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலி கொஞ்சமும் கண்டுகொள்வோம்!
ஆறும் அறுபதும் ஆனஇருபதும் ஆடிநடந்து செல்வோம்-சில ஆனந்தப் பாடல்கள் வேலனைப் பாடட்டும் அன்புடன் ஊர்ந்து செல்வோம்! ஊறுகள் நேரட்டும் உமையவள் மைந்தனை உச்சத்தில் வைத்திருப்போம் – கையில் உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்து மிச்சத்தில் வாழ்ந்திருப் போம்! வேலன் குமரன் முருகன் திருச்செந்தில் வேட்டுவன் கந்தனுக்கு – இரு கால்கள் நடக்கின்ற நடையினில் தானுயர் கனிவு நிறைந்திருக்கு! காலம் வழிவிடும் கச்சிதமாய் சென்று கால்களிலே விழுவோம் – அவன் கால்களிலே விழக்கால்கள் நடக்கட்டும் காவிரிபோல் வளர்வோம்!
~~*~~*~~*~~
0 comments:
Post a Comment