Chettinad Bhajan Lyrics
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு!
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு!
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு!
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு!
தென்பழநி ஆண்டவனே!
தேவர் சிறை மீட்டவனே
தென்பழநி ஆண்டவனே!
தேவர் சிறை மீட்டவனே
கண் திறந்து என்னை நீயும்
காத்தருள வேண்டுமய்யா
உன்னையே நம்பி வந்தேன்!
உள்ளுருகி பாடி வந்தேன்
உன்னையே நம்பி வந்தேன்!
உள்ளுருகி பாடி வந்தேன
உன் கோயில் நாடி வந்தேன்
உன் அருளைத் தேடி வந்தேன்
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு!
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு!
கண்டவுடன் பக்தி வரும் !
காவடியைச் சுமந்து வந்தேன்
கண்டவுடன் பக்தி வரும் !
காவடியைச் சுமந்து வந்தேன்
கால் நடையாய் நடந்து வந்தேன்
கவலைகளை மறந்து வந்தேன்
பால் குடத்தை ஏந்தி வந்தேன்!
பாத வலி மறந்து வந்தேன்
பால் குடத்தை ஏந்தி வந்தேன்!
பாத வலி மறந்து வந்தேன்
கந்தா உன் பேரழகைக்
கண் குளிர காண வந்தேன்
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு!
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு!
வேலோடு நடந்து வந்தேன்!
வேதனையை மறந்து வந்தேன்
வேலோடு நடந்து வந்தேன்!
வேதனையை மறந்து வந்தேன்
வேலா உன் பதம் தொழுது
வேண்டும் வரம் கேட்க வந்தேன்
அருளாடி உருவினிலே!
ஆறுமுகா வந்திடுவாய்
அருளாடி உருவினிலே!
ஆறுமுகா வந்திடுவாய்
அறு கால் சவுக்கையிலே
பிரம்பெடுத்து ஆடிடுவாய்
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு!
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு!
அன்னமிடும் மடத்தினிலே!
நீ இருக்கும் பேரழகை
அன்னமிடும் மடத்தினிலே!
நீ இருக்கும் பேரழகை
ஆண்டவனே உனதருளால்
கண்டு நான் மகிழ்ந்திடுவேன்
எந்தன் உயிர் காவலனே!
எங்கும் நிறை வேலவனே
எந்தன் உயிர் காவலனே!
எங்கும் நிறை வேலவனே
என்னை நீயும் ஆண்டு கொண்டு
ஏற்றமுற செய்திடுவாய்
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு!
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு!
அருளாடி அழைத்து வரும்!
காவடியை பால் குடத்தை
அருளாடி அழைத்து வரும்!
காவடியை பால் குடத்தை
அன்புடனே ஏற்றுக்கொள்வாய்
அடியவர்க்கு வரமளிப்பாய்
சொந்தமுடன் நான் அழைக்க!
வந்திடுவாய் பழனி வேலா
சொந்தமுடன் நான் அழைக்க!
வந்திடுவாய் பழனி வேலா
கண் திறந்து என்னை நீயும்
காத்தருள வேணுமய்யா
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு!
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு!
அவன் கருணை அழகு!
அவன் கருணை அழகு!
~♤~♤~♤~♤~♤~♤~
0 comments:
Post a Comment