Amman Devotional Song Lyrics
Singer - L.R.Eswari
செவப்பு சேலை கட்டிக்கிட்டு
வேப்பிலையும் எடுத்துக்கிட்டு
வேற்காட்டு கருமாரி
ஆடி வந்தாளாம்
செவப்பு சேலை கட்டிக்கிட்டு
வேப்பிலையும் எடுத்துக்கிட்டு
வேற்காட்டு கருமாரி
ஆடி வந்தாளாம்
அவள் விருப்புடனே தொழுபவரின்
வினைகளையே ஓட வைத்து
பொறுப்புடனே நம்மை காக்க
ஆடி வந்தாளாம்
மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா
சிறப்புடனே பவனி வந்து
சிந்தையிலே குடி புகுந்து
சிறப்புடனே பவனி வந்து
சிந்தையிலே குடி புகுந்து
கருணை மனம் கொண்டு
நம்மை காக்க வந்தாளாம்
அவ மரகதத்தில் திலகமிட்டு
மரிக்கொழுந்து மலரெடுத்து
மரகதத்தில் திலகமிட்டு
மரிக்கொழுந்து மலரெடுத்து
சிரத்தினிலே சூடிக்கொண்டு
பவனி வந்தாளாம்
மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா
உன் வேப்பிலையும் திருநீரும்
வேண்டியதை தந்திடுமே அம்மா
காப்பது உன் திரிசூலம்
கவலை யாவும் தீரும் அம்மா
மாபெரும் பக்தர்கள் கூட்டம்
உன் சன்னதியில் அம்மா
ஆபத்தில் உதவிட உன் ஆயிரம்
கைகள் அணைத்திடுமே அம்மா
தொட்டியங்குளந்தன்னில் வாழும்
எங்க மகமாயி
மட்டில்லாத பாசம் கொண்ட
எங்க மகமாயி
சக்தியிலே நெருப்பெடுத்து
சதிராடும் மாரி
சக்தியிலே நெருப்பெடுத்து
சதிராடும் மாரி
கட்டி காக்கும் அன்னை
போல காத்திடுவாள் மாரி
கட்டி காக்கும் அன்னை
போல காத்திடுவாள் மாரி
செவப்பு சேலை கட்டிக்கிட்டு
வேப்பிலையும் எடுத்துக்கிட்டு
வேற்காட்டு கருமாரி
ஆடி வந்தாளாம்
அவள் விருப்புடனே தொழுபவரின்
வினைகளையே ஓட வைத்து
பொறுப்புடனே நம்மை காக்க
ஆடி வந்தாளாம்
மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா
கருமாரியம்மா
~~~*~~~
0 comments:
Post a Comment