முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே பாடல்வரிகள் - Mudhal Vanakkam Engal Muruganuke Lyrics

Kantharaj Kabali
0

 

Vel Murugan


Murugan Devotional Song Lyrics

Singer -Seerkazhi Govindarajan


முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே (x2)

முன்னின்று காக்கும் இறைவனுக்கே (x2)

புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால் (x2)

பூச் சொரிந்தே மனம் பாடி வரும்..(x2)


முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே

முன்னின்று காக்கும் இறைவனுக்கே

முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே


சிம்மாசனம் போன்ற மயிலாசனம் (x2)

செங்கோலும் அவன் கையில்

சிரிக்கின்ற வேல்

சிம்மாசனம் போன்ற மயிலாசனம்

செங்கோலும் அவன் கையில்

சிரிக்கின்ற வேல்

அடியார் தம் இதயங்கள் குடி மக்களே (x2)

அருளாட்சி எல்லாம் அவன் ஆட்சியே (x2)

                                        

முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே

முன்னின்று காக்கும் இறைவனுக்கே

முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே


முதல் சங்கம் உருவாக மொழியானவன்

இடை சங்கம் கவி பாட புகழானவன்

முதல் சங்கம் உருவாக மொழியானவன்

இடை சங்கம் கவி பாட புகழானவன்

கடை சங்கம் வாழ்வுக்கும் வழியானவன்(x2) 

கடல் கொண்டும் அழியாத தமிழானவன்(x2)


முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே

முன்னின்று காக்கும் இறைவனுக்கே

புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால்

பூச் சொரிந்தே மனம் பாடி வரும்..

முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே 

                                    

~~~*~~~

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top