வர வேண்டும் வர வேண்டும் பாடல்வரிகள் - Vara Vendum Vara Vendum Song Lyrics

Lord_Murugan

Murugan Devotional Song Lyrics

வர வேண்டும் வர வேண்டும் பாடல்வரிகள்

வரவேண்டும் வரவேண்டும் செந்தில் வடிவேலா-வரம்

தரவேண்டும் தரவேண்டும் செந்தில் வடிவேலா

வரவேண்டும் வரவேண்டும் செந்தில் வடிவேலா-வரம்

தரவேண்டும் தரவேண்டும் செந்தில் வடிவேலா

தாங்கரிய துன்பம் வந்தால் செந்தில் வடிவேலா-நீ

தாயாக வரவேண்டும் செந்தில் வடிவேலா

ஏங்கியழும் போது தேற்ற செந்தில் வடிவேலா-நீ

எந்தையாக வரவேண்டும் செந்தில் வடிவேலா!

வரவேண்டும் வரவேண்டும் செந்தில் வடிவேலா-வரம்

தரவேண்டும் தரவேண்டும் செந்தில் வடிவேலா

வருகின்ற நோய் தீர்க்க செந்தில்வடிவேலா-நீ

மருந்தாக வரவேண்டும் செந்தில் வடிவேலா

அருவினையைத் தீர்ப்பதற்குச் செந்தில் வடிவேலா-நீ

ஆள்வினையாய் வரவேண்டும் செந்தில் வடிவேலா!

வரவேண்டும் வரவேண்டும் செந்தில் வடிவேலா-வரம்

தரவேண்டும் தரவேண்டும் செந்தில் வடிவேலா

மயங்கு வயதடையும் காலம் செந்தில் வடிவேலா-நீ

மகவாக வரவேண்டும் செந்தில் வடிவேலா

தயங்குநிலை வந்தநேரம் செந்தில் வடிவேலா-என்

தம்பியாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!

வரவேண்டும் வரவேண்டும் செந்தில் வடிவேலா-வரம்

தரவேண்டும் தரவேண்டும் செந்தில் வடிவேலா

அவலம்வரும் நேரம்கண்டு செந்தில் வடிவேலா-என்

அண்ணனாக வரவேண்டும் செந்தில் வடிவேலா

தவழுமுள்ளக் கருத்தைச்சொல்ல செந்தில் வடிவேலா-நீ

தமிழாக வரவேண்டும் செந்தில் வடிவேலா

வரவேண்டும் வரவேண்டும் செந்தில் வடிவேலா-வரம்

தரவேண்டும் தரவேண்டும் செந்தில் வடிவேலா

வானம் பார்க்கும் உழவருக்குச் செந்தில் வடிவேலா-நீ

மழையாக வரவேண்டும் செந்தில் வடிவேலா

நானடையும் தீங்ககல செந்தில் வடிவேலா-நீ

நண்பனாக வரவேண்டும் செந்தில் வடிவேலா

வரவேண்டும் வரவேண்டும் செந்தில் வடிவேலா-வரம்

தரவேண்டும் தரவேண்டும் செந்தில் வடிவேலா

அறியாமை சூழ்ந்தபோது செந்தில் வடிவேலா-நீ

அறிவாக வரவேண்டும் செந்தில் வடிவேலா

நெறியாவும் முடியும்போது செந்தில் வடிவேலா

நீயேதான் வரவேண்டும் செந்தில் வடிவேலா!

வரவேண்டும் வரவேண்டும் செந்தில் வடிவேலா-வரம்

தரவேண்டும் தரவேண்டும் செந்தில் வடிவேலா

கடலோடி மயங்குவார்க்கும் செந்தில் வடிவேலா-நீ

கலமாக வரவேண்டும் செந்தில் வடிவேலா

உடல்வாடும் ஏழைவாழ செந்தில் வடிவேலா-நீ

உறுதுணையாய் வரவேண்டும் செந்தில் வடிவேலா!

வரவேண்டும் வரவேண்டும் செந்தில் வடிவேலா-வரம்

தரவேண்டும் தரவேண்டும் செந்தில் வடிவேலா

~~~*~♤~♤~♤~*~~~

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Durga Song Lyrics

Amman Devotional Songs Lyrics

.

Devi Devotional Songs Lyrics

.