திருச்செந்தூரில் போர் புரிந்து பாடல்வரிகள் -Thiruchendooril Por Purindhu Lyrics

Murugan Devotional Song Lyrics

Singers -Radha Jayalakshmi

திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்

திருத்தணி கோவில் கொண்டானாம், அவன் பக்தர்களெல்லாம்

காவடி தூக்கி வந்தாராம் ஆ..ஆ

திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்

திருத்தணி கோவில் கொண்டானாம், அவன் பக்தர்களெல்லாம்

காவடி தூக்கி வந்தாராம் 

அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம்

வரிசை வரிசை என அழகுக் காவடிகள் 

தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி ஆ...

வரிசை வரிசை என அழகுக் காவடிகள் 

தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி

வருகின்ற காட்சி பாருங்கள் 

இந்த ஆனந்தமெல்லாம் எதிலுண்டு சாட்சி கூறுங்கள் ஆ

திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்

திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம்

காவடி தூக்கி வந்தாராம் 

அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம்

கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு 

முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு

ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்

கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு 

முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு

ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்

இங்கே ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்

தேடி வருவார்

காவடிகள் பால் காவடிகள், பழக் காவடிகள்

புஷ்பக் காவடிகள், மச்சக் காவடிகள், பன்னீர்க் காவடிகள்

சேவற்காவடிகள், சர்ப்பக் காவடிகள்,தீர்த்தக் காவடிகள்

பால் கவடி,பழக் காவடி ,புஷ்பக் காவடி, மச்சக் காவடி, பன்னீர் காவடி

சேவற்க்காவடகள், சர்பக் காவடிகள், தீர்க்கக்காவடிகள்

கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு

ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்

கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு

ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் இங்கே

ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் தேடி வருவார்

வடிவேல் முருகனுக்கு அரோகரா

வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை

திருத்தணி முருகனுக்கு அரோகரா

வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை

அணைவோம் கந்தன் சேவடி 

என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி

அணைவோம் கந்தன் சேவடி

 என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி

கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு

சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே

உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே

முருகனருள் கூட வருமே

கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு (x2)

சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே

உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே

சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே

உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே

முருகனருள் கூட வருமே

கந்தனாருள் கூட வருமே

குமரன் அருள் கூட வருமே

~♤~♤~♤~

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Shiva Song Lyrics

Murugan Devotional Songs Lyrics

.

Lakshmi Devotional Songs Lyrics

.