<<< NO AUDIO>>>
சோதிவடிவானவளே அம்மா!
ஆதி பராசக்தியே தாயே
சாதி சமயமின்றி நின்னை
சரிசமமாய் எவரும்
வணங்குவரே!
நா நிலத்தின் நாயகியே
நல்லவர் தம் ஈஸ்வரியே!
பூவுலகில் புனிதவதியே
பூக்க வைக்கும்
அருமழையே!
கண் இரண்டும் குளிர்கின்றது
காட்சி தனை காண்கின்றது!
நின் அழகை ரசிக்கின்றது .
நிலை இன்றி தவிக்கின்றது !
ஐயன் அவன் மனையாளே!
ஐங் கரனின் தாயவளே!
தென்றல் என உழல்பவளே!
தெய்வம் என இருப்பவளே! அம்மா!
0 comments:
Post a Comment