தேனினும் இனிமைமிக்க தெய்வமே
தேடுவோர்க்கு கிடைக்கின்ற செல்வமே!
வாடுகின்ற பயிர்களுக்கு அருமழையே !
வறுமையிலே உழல்பவர்க்கு அறுசுவையே!
பாடாதோ நல்வாய்கள் உன்புகழை
பணியாதோ நல்லுயிர்கள் உன்னடியை!
பரவாதோ நல்லெண்ணம் இப்புவியில்
பயனேதோ அவையின்றி இவ்வுலகில்
கண்ணை இனி நான் தொழுவேன்
உன்னைக்கண்டு விட்ட காரணத்தால்!
காலை இனி நான் மறவேன்!
உன்னைக்காண வந்த கடமையினால்!
பீடைவிடும் தொற்றி வந்த பிழைகள்விடும்
பிணிகள் விடும் செய்துவிட்ட குறைகள் விடும்
வாடை என்று வீசுகின்ற பக்திவரும் அம்மா!
வாய்மணக்க வாழ்த்துகின்ற சக்திவரும் அம்மா!
0 comments:
Post a Comment