<<< NO AUDIO>>>
வெண் மாலைச் சரத்துடன்
வெண் நுரை மனத்துடன்
பொன் மானாய் மின்னும்
பெண் மணியே பேரொளியே!
வெண் மாலைச் சரத்துடன்
வெண் நுரை மனத்துடன்
பொன் மானாய் மின்னும்
பெண் மணியே பேரொளியே!
கண் என நினைப்பாட
கண்ணீரை துடைத்துவிடும்!
கருணையே அருங்கலையே
கடவுளாம் நினையே பணிகின்றேன்!
சினத்தை அறுத்து நல்
மனத்தை செழிப்புடன் வளர்த்து!
குணத்தை எனக்கு உவந்து எம்
இனத்தை காத்து அருள்வாய்!
கணமும் உனை பிரிய
மனம் ஏனோ அலைகிறது!
தினமும் உன் உடனே
தனமும் வெறுத்துவாழ துடிக்கிறது அம்மா!
~*~*~*~
0 comments:
Post a Comment