அழகு தெய்வமாக வந்து - Azhagu Deivamaga Vanthu Tamil Lyrics

அழகு தெய்வமாக வந்து - Azhagu Deivamaga Vanthu


அழகு தெய்வமாக வந்து 
காவடிச் சிந்து---செஞ்சுருட்டி

Singer - Shobana Vignesh


அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன்
ஆதி சக்தி அன்னை தந்த பாலன் - அவன்
அசுரர் தம்மை வென்ற வடிவேலன் - நல்ல
அமுதமென்னுமோர் தமிழில் பாடிடும்
அன்பர் வாழவே கருணை செய் குகன்
அரன் உகந்த குருவாம் உயர் சீலன் -என்றும்
அருள் சுரந்தே காக்கும் அனுகூலன்


குழந்தையாக குமரனாக கோவணாடைத் துறவியாக
கோலம் கொள்ளும் காட்சி என்ன சொல்வேன்? - கண்டு
கூடும் மாய வினைகள் யாவும் வெல்வேன்! - இந்த
குவயலத்திலோர் கலியுகப் பெரு வரதனாய்த் திகழ்ந்தருளும் கந்தனை
கும்பிட்டெந்தன் பிணிகள் நீங்கி மகிழ்வேன் - உள்ளக்
குமுறல் ஓய்ந்தே நல்ல வழி செல்வேன்

    
நீல மயில் மீதில் நிற்போன் ஆவினன்குடியில் தோன்றும்
நிமலனாம் குழந்தை முருகேசன் - அவன்
நித்திலம் போல் முறுவல் வள்ளி நேசன் - இந்த
நீனிலம் தனில் அன்பு செய்திடும் அடியர் யாரையும் காத்து நின்றிடும்
நித்ய சோதி வடிவமாம் பிரகாசன் - உடன்
நெஞ்சில் நீங்காதென்றும் அங்கு வாசன்

     
அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன்
ஆதி சக்தி அன்னை தந்த பாலன் - அவன்
அசுரர் தம்மை வென்ற வடிவேலன் - நல்ல
அமுதமென்னுமோர் தமிழில் பாடிடும்
அன்பர் வாழவே கருணை செய் குகன்
அரன் உகந்த குருவாம் உயர் சீலன் - என்றும்
அருள் சுரந்தே காக்கும் அனுகூலன்

~*~*~*~*~*~*~


About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Ganapathi Devotional Songs Lyrics

.

Vinayagar Devotional Songs Lyrics

.

Ganesh Songs Hindi