Ganapathi Devotional Song Lyrics
கணபதி துதி பாடல்
கணபதியே கஜபதியே காணாத பேரொளியே
காக்கும் கடவுள் விநாயகா கனிவார் கதிரொளி விநாயகா
கணபதியே கஜபதியே காணாத பேரொளியே
காக்கும் கடவுள் விநாயகா கனிவார் கதிரொளி விநாயகா
அருகம்புல் மாலைகள் ஆனைமுக லீலைகள்
மோதகதித்திப்பு பேரின்ப பூரிப்பு
அருகம்புல் மாலைகள் ஆனைமுக லீலைகள்
மோதகதித்திப்பு பேரின்பபூரிப்பு
தோப்புக்கரண துதிகளே நல்லருளின் வழிகளாம்
பொழியட்டும் மகிழ்வு பொங்கட்டும் வாழ்வு
தோப்புக்கரண துதிகளே நல்லருளின் வழிகளாம்
பொழியட்டும் மகிழ்வு பொங்கட்டும் வாழ்வு
விடலையின்கணக்கு வேண்டலின் வழக்கு
நாமத்தின் மந்திரம் நயநாத வந்தனம்
விடலையின்கணக்கு வேண்டலின் வழக்கு
நாமத்தின் மந்திரம் நயநாத வந்தனம்
கைவணங்கும் வேழனே கருணையின் வேந்தனே
பொற்பின்தெய்வம் விநாயகா போற்றியேஉய்வோம் விநாயகா
கைவணங்கும் வேழனே கருணையின் வேந்தனே
பொற்பின்தெய்வம் விநாயகா போற்றியேஉய்வோம் விநாயகா
கணபதியே கஜபதியே காணாத பேரொளியே
காக்கும் கடவுள் விநாயகா கனிவார் கதிரொளி விநாயகா
கணபதியே கஜபதியே காணாத பேரொளியே
காக்கும் கடவுள்விநாயகா கனிவார் கதிரொளி விநாயகா

~~~*~~~