Shivan Devotional Song Lyrics
Singer - Prabhakar
அருள் வடிவாகிய ஆதி சிவனே
அகிலத்தைக் காக்கும் ஜோதி சிவனே
அன்பரின் நெஞ்சினில் வாழும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
அகிலத்தைக் காக்கும் ஜோதி சிவனே
அன்பரின் நெஞ்சினில் வாழும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
வரும்வினையாவும் நீக்கும் சிவனே
வாசலை மிதித்திட அருளும் சிவனே
அறனாயங்களை காக்கும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
வாசலை மிதித்திட அருளும் சிவனே
அறனாயங்களை காக்கும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
கண்களில் கருணை மழைதரும் சிவனே
அன்பரின் குறைகளைத் தீர்க்கும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
கைத்தொழும் பேர்க்கு அருளும் சிவனே
அன்பரின் குறைகளைத் தீர்க்கும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
கைத்தொழும் பேர்க்கு அருளும் சிவனே
ஞானியர் யாவரும் போற்றும் சிவனே
நல்வழிக் காட்டும் எங்களின் சிவனே
ஆணவ குணத்தை அழித்திடும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
திருவிளையாடல் புரிந்திடும் சிவனே
தீவினை அழித்திடத் தோன்றும் சிவனே
அறிவின் ஒளியாய் விளங்கிடும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
தீவினை அழித்திடத் தோன்றும் சிவனே
அறிவின் ஒளியாய் விளங்கிடும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
பிறவியின் பயனை வழங்கிடும் சிவனே
பேருலகாளும் பெரியவன் சிவனே
துறவிகள் போற்றும் தூயவன் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
விரிசடைக் கொண்ட விந்தை சிவனே
விண்ணவர் போற்றும் எங்கள் சிவனே
பரிவுடன் அன்பரை பார்க்கும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
விண்ணவர் போற்றும் எங்கள் சிவனே
பரிவுடன் அன்பரை பார்க்கும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
பொறுமையின் வடிவே புண்ணிய சிவனே
புலித்தோல் ஆடை அணிந்த சிவனே
வறுமையைத் தீர்க்கும் வள்ளல் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
சூலம் கையினில் ஏந்திய சிவனே
சுப்ரமணியனின் தந்தை சிவனே
காலனை அன்று மிரட்டிய சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
சுப்ரமணியனின் தந்தை சிவனே
காலனை அன்று மிரட்டிய சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
மாளவனயனும் காணா சிவனே
மலையென உயர்ந்து நின்றாய் சிவனே
பாதம் பணிந்திட வந்தோம் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
தாயென எண்களைக் காத்திடும் சிவனே
தாண்டவமாடும் தலைவன் சிவனே
நோயினைத் தீர்க்கும் மருந்தும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
தாண்டவமாடும் தலைவன் சிவனே
நோயினைத் தீர்க்கும் மருந்தும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
ஊழ்வினையாவும் நீக்கிடும் சிவனே
உண்மை அன்பினை ஏற்கும் சிவனே
ஏழிசை யாவிலும் நிறைந்த சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
காமனைக் கண்ணால் எரித்தாய் சிவனே
கபாலம் கையில் கொண்டாய் சிவனே
சேமங்கள் தந்திடும் தெய்வம் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
கபாலம் கையில் கொண்டாய் சிவனே
சேமங்கள் தந்திடும் தெய்வம் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
உமையவள் நெஞ்சினில் உறைந்தாய் சிவனே
உலகத்தின் இயக்கம் என்றும் சிவனே
வளங்கள் நமக்குத் தருவான் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
நஞ்சினை அருந்திய நாயகன் சிவனே
நாடியப்பேருக்கு துணைவரும் சிவனே
நெஞ்சினில் என்றும் நிறைந்த சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
நாடியப்பேருக்கு துணைவரும் சிவனே
நெஞ்சினில் என்றும் நிறைந்த சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
தஞ்சமடைந்தால் காக்கும் சிவனே
தன்னிகரில்லா எங்களின் சிவனே
வஞ்சனை எண்ணத்தை மாற்றும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
சஞ்சலம் நீக்கிடும் சங்கரன் சிவனே
சாந்தசொரூபன் சக்தியின் சிவனே
வந்தனம் சொல்லிட வரம்தரும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
சாந்தசொரூபன் சக்தியின் சிவனே
வந்தனம் சொல்லிட வரம்தரும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
பஞ்சபூதமாய் விளங்கிடும் சிவனே
பார்வதிதேவி நாயகன் சிவனே
அஞ்சிடும் குணத்தை மாற்றும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
ஆடல்கலையில் வல்லவன் சிவனே
அணுவினில் இருக்கும் ஆண்டவன் சிவனே
மேன்மைகள் வழங்கும் மேலோன் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
அணுவினில் இருக்கும் ஆண்டவன் சிவனே
மேன்மைகள் வழங்கும் மேலோன் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
மாதொருபாகம் கொண்டவன் சிவனே
மண்ணுயிர்க்கெல்லாம் காவல் சிவனே
சோதனை நீக்கிடும் சுந்தரன் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
அற்புதம் ஆயிரம் புரிந்திடும் சிவனே
அன்புடன் அழைத்திடத் துணைவரும் சிவனே
பொற்பதம் பணிந்தால் பொருள்தரும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
அன்புடன் அழைத்திடத் துணைவரும் சிவனே
பொற்பதம் பணிந்தால் பொருள்தரும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
கற்பனைக்கெட்டா நாயகன் சிவனே
கைதொழுதாலே பலன்தரும் சிவனே
நற்கதி நாளும் வழங்கிடும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
கங்கையைத் தலையினில் தாங்கிய சிவனே
கமண்டலம் கையினில் ஏந்திய சிவனே
எங்களை என்றும் காத்திடும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
கமண்டலம் கையினில் ஏந்திய சிவனே
எங்களை என்றும் காத்திடும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
பொங்கிடும் கருணை கொண்டவன் சிவனே
பூஜைகள் செய்திட மகிழ்ந்திடும் சிவனே
அங்கம் சிலிர்த்திட ஆடிடும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
எண்ணிய காரியம் முடித்திடும் சிவனே
ஏற்றம் வாழ்வில் தந்திடும் சிவனே
பண்ணியப் பாவம் போக்கிடும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
ஏற்றம் வாழ்வில் தந்திடும் சிவனே
பண்ணியப் பாவம் போக்கிடும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
கண்கள் மூன்று கொண்டவன் சிவனே
கனிவுடன் நம்மை பார்ப்பவன் சிவனே
விண்ணையும் மண்ணையும் படைத்தவன் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
தேவரின் துன்பம் தீர்த்தவன் சிவனே
திருவருள் புரிந்திட வருபவன் சிவனே
மாபெரும் சக்தியைக் கொண்டவன் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
திருவருள் புரிந்திட வருபவன் சிவனே
மாபெரும் சக்தியைக் கொண்டவன் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
மூர்த்திகள் மூவரில் மூத்தவன் சிவனே
முக்தியைக் கொடுக்கும் ஆண்டவன் சிவனே
கீர்த்திகள் வழங்கிடும் தேவனும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
ஆரமுதாக விளங்கிடும் சிவனே
ஆலவாயிலேநின்றிடும் சிவனே
ஆரூர் தன்னில் நலம் தரும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
ஆலவாயிலேநின்றிடும் சிவனே
ஆரூர் தன்னில் நலம் தரும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
சீருடன் நம்மை வாழ்விக்கும் சிவனே
சிந்தையில் புகுந்து செயல்தரும் சிவனே
நாரணன் போற்றும் நாயகன் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
உடலினை இயக்கும் உணர்வும் சிவனே
உதிரத்தில் கலந்த அணுவும் சிவனே
சுடலை மண்ணைப் பூசிடும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
உதிரத்தில் கலந்த அணுவும் சிவனே
சுடலை மண்ணைப் பூசிடும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
கடலின் படகாய் வருவான் சிவனே
கைகொடுத்தென்றும் காப்பான் சிவனே
விடைபெற முடியா விளக்கம் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
சூரியனாக ஒளிதரும் சிவனே
சூழ்ந்திடும் இடரை நீக்கிடும் சிவனே
ஆலயம் எங்கிலும் நிறைந்தவன் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
சூழ்ந்திடும் இடரை நீக்கிடும் சிவனே
ஆலயம் எங்கிலும் நிறைந்தவன் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
சந்திரனாக குளிர்ந்திடும் சிவனே
சமயத்தில் வந்து உதவிடும் சிவனே
சபரிநாதனைத் தந்தவன் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
கிரிவலம் வந்திட துணைவரும் சிவனே
கேட்டதை கொடுக்கும் தெய்வம் சிவனே
நெறியுடன் வாழ்ந்திடச் செய்வான் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
கேட்டதை கொடுக்கும் தெய்வம் சிவனே
நெறியுடன் வாழ்ந்திடச் செய்வான் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
பறவையும் விலங்கும் வணங்கிடும் சிவனே
பண்புடன் மனிதனை படைத்ததும் சிவனே
இறைவன் என்றால் அவன்தான் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
~~~*~~~