Murugan Devotional Song Lyrics
Singer - Mahanadhi Shobana
மலையேறி நின்றவா மயிலேறி ஓடிவா
நீயின்றி நான் இல்லை முருகைய்யா
மலையேறி நின்றவா மயிலேறி ஓடிவா
நீயின்றி நான் இல்லை முருகைய்யா
ஞானம் உதித்ததும் நாலும் தெரிந்ததும் (2)
உனைத்தேடி அலைகின்றேன் முருகைய்யா
மலையேறி நின்றவா மயிலேறி ஓடிவா
நீயின்றி நான் இல்லை முருகைய்யா (2)
அறியாத வயது முதல் உன் ஞாபகம்
உன் நினைவாலே அழுகின்றேன் கரை சேர்க்கணும்
குறவள்ளி தெய்வானை உன் தோளிலே
நான் உறவாக வேண்டுவது உன்பாதமே
உடல் என்ன ஓர் நாள் கிழமாகி தேயும்
உயிர் என்ன ஓர் நாள் சிறகாகி மாயும்
தினந்தோறும் உன் ஞானமே
அதனால் விதை பேசும் வேதாந்தமே
மலையேறி நின்றவா மயிலேறி ஓடிவா
நீயின்றி நான் இல்லை முருகைய்யா
ஞானம் உதித்ததும் நாலும் தெரிந்ததும்
உனைத்தேடி அலைகின்றேன் முருகைய்யா
மலையேறி நின்றவா மயிலேறி ஓடிவா
நீயின்றி நான் இல்லை முருகைய்யா (2)
முருகா நீ வரவில்லை என்றால் இந்த
சிறு ஏழைக்கு உலகத்தில் யார்தான் காவல்
அழுது ஓய்ந்த பின்னாலே தூங்கச் சென்றால்
உன் நினைவாக உசுப்புதைய்யா வைகறை சேவல்
வழி என்ன சொல்லு கதிர்காம வேலா
விழிநீரை கண்டும் விளையாடலாமா
வரவேண்டும் மயில் வாகனம்
முருகன் மடிமீது நான் தூங்கணும்
மலையேறி நின்றவா மயிலேறி ஓடிவா
நீயின்றி நான் இல்லை முருகைய்யா
மலையேறி நின்றவா மயிலேறி ஓடிவா
நீயின்றி நான் இல்லை முருகைய்யா
ஞானம் உதித்ததும் நாலும் தெரிந்ததும் (2)
உனைத்தேடி அலைகின்றேன் முருகைய்யா
மலையேறி நின்றவா மயிலேறி ஓடிவா
நீயின்றி நான் இல்லை முருகைய்யா
நீயின்றி நான் இல்லை முருகைய்யா
நீயின்றி நான் இல்லை முருகைய்யா
நீயின்றி நான் இல்லை முருகைய்யா
🚩🚩🐓வெற்றி வேல் வீர வேல்🐓🚩🚩
மலையேறி தெரிந்ததும்
உனைத்தேட
0 comments:
Post a Comment