ஆராதனை செய்திடுவோம் அம்மா
ஸ்ரீ வாசவி தேவிக்கு
ஆராதனை செய்திடுவோம் அம்மா!
வைகாசி மாதம் பிறந்து வந்தாயே!
வைஸ்ய குலம்தனை தழைக்கச் செய்தாயே!
வேண்டிடும் வரங்களை தந்திடுவாயே!
காத்யாயினியே காத்திடுவாயே!
ஆராதனை செய்திடுவோம் அம்மா
ஸ்ரீ வாசவி தேவிக்கு
ஆராதனை செய்திடுவோம் அம்மா!
மல்லிகை முல்லை விருபாட்சியிலே!
உன்னை நாங்கள் அர்ச்சிப்போமே!
பொங்கிடும் செல்வம் எங்களுக்கருள்வாய்!
மங்கையர்திலகமே மங்கள தேவியே!
ஆராதனை செய்திடுவோம் அம்மா
ஸ்ரீ வாசவி தேவிக்கு
ஆராதனை செய்திடுவோம் அம்மா!
விருபாட்க்ஷனனின் சோதரி நீயே!
கல்ப வ்ருட்க்ஷமாய் காத்திடுவாயே!
சர்வ மங்கள பூரணியே உன்!
சன்னதி தன்னில் சரண்புகுந்தோமே!
ஆராதனை செய்திடுவோம் அம்மா
ஸ்ரீ வாசவி தேவிக்கு
ஆராதனை செய்திடுவோம் அம்மா!
~~~*~~~
0 comments:
Post a Comment