வெள்ளிக் கொம்பன் விநாயகனே
வினைகள் தீர்க்கும் ஐங்கரனே
அன்னை பராசக்தி அருந்தவப் புதல்வா
ஆனைமுகனே விநாயகனே
வெள்ளிக் கொம்பன் விநாயகனே
வினைகள் தீர்க்கும் ஐங்கரனே
அன்னை பராசக்தி அருந்தவப் புதல்வா
ஆனைமுகனே விநாயகனே
அகமும் புறமும் இருப்பவனே
அடியார்கள் துயர்துடைப்பவனே
ஆற்றோரத்திலும் குளக்கரை தனிலும்
அமர்ந்தர சாட்சி புரிபவனே
அகமும் புறமும் இருப்பவனே
அடியார்கள் துயர்துடைப்பவனே
ஆற்றோரத்திலும் குளக்கரை தனிலும்
அமர்ந்தர சாட்சி புரிபவனே
ஓங்காரப் பொருளின் தத்துவமே
உள்ளத்தில் குடிகொண்டவனே
உன்புகழ் பாடும் பக்தர்கள் குறையை
உடனடியாகத் தீர்ப்பவனே
ஓங்காரப் பொருளின் தத்துவமே
உள்ளத்தில் குடிகொண்டவனே
உன்புகழ் பாடும் பக்தர்கள் குறையை
உடனடியாகத் தீர்ப்பவனே
வெள்ளிக் கொம்பன் விநாயகனே
வினைகள் தீர்க்கும் ஐங்கரனே
அன்னை பராசக்தி அருந்தவப் புதல்வா
ஆனைமுகனே விநாயகனே
ஆனைமுகனே விநாயகனே
~~~*~~~
Extra
பக்தர்கள் நாங்கள் ஒன்றுகூடி
பாத மலர்களைப் பணிகின்றோம்
இங்கு எழுந்து அருள வேண்டுமய்யா
எங்கள் குறைகளைத் தீருமய்யா
~~~*~~~
0 comments:
Post a Comment