அருள் செய்ய லாகாதோ அம்மா? பாடல்வரிகள்




அருள் செய்ய லாகாதோ அம்மா? (x2)

நீயே கதியென்று உருவேற்றினேன்

என் உளமார தினம்பாடி உனையேற்றினேன்


அருள் செய்ய லாகாதோ அம்மா?

நீயே கதியென்று உருவேற்றினேன்

என் உளமார தினம்பாடி உனையேற்றினேன்


| மதுரை அரசியவள் வேண்டுதலை மதித்தாய்

கைலாயந் தனை விட்டு பூவுலகில் உதித்தாய் |x2|

கிளி யேந்தும் கிளியே நீ செந்நெருப்பில் முகிழ்த்தாய்

கிலி நீக்கி கலி தீர்க்க கருணையால் அவ தரித்தாய்


அருள் செய்ய லாகாதோ அம்மா?


| கூடல் நகரினிலே கூத்தனுடன் ஆட

கொண்டாடும் அடியவர்கள் திருப் பதமே நாட |x2|

நாடிடும் அடியவரை நலமுடனே பேண... (x2)

நானிலம் போற்றும் உன்றன் திருமுகம் நான் காண


அருள் செய்ய லாகாதோ அம்மா? 

நீயே கதியென்று உருவேற்றினேன்

என் உளமார தினம்பாடி உனையேற்றினேன்


அருள் செய்ய லாகாதோ அம்மா? 


~~~*~~~


About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Ganapathi Devotional Songs Lyrics

.

Vinayagar Devotional Songs Lyrics

.

Ganesh Songs Hindi