மனமதை மனையாய் பாடல்வரிகள் - Manamathai Manaiyaai Lyrics

Kantharaj Kabali
0



Singer - Nithyashree Mahadevan

மனமதை மனையாய் இட்டு குணமதை கலசம் செய்து

மங்களப் பொருளாம் மஞ்சள் குங்குமம் அதற்கு வைத்து


அன்பெனும் மலர்கள் சூட்டி அதனாலே அர்ச்சனை செய்து

வணங்கியே நின்றோம் அம்மா வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே


சினமெனும் சிக்கறுத்து சிந்தையை சுத்தி செய்து

செந்தூரி அழகே தாயே சேவித்து நின்றோம் அம்மா


தனமோடு தாழாகீர்த்தி தந்தருள வேண்டுகின்றோம்

தயையுடன் வந்தே நின்று வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே


இனம் கண்டு இல்லை என்னும் குணமில்லா குலமே உனது

கலைவடிவான உன்னை தினம் பாடும் செயலே எனது


கவியுனுள் கருத்தாய் வந்து பொருளென புகுந்து நிற்பாய்

புகழோடு வாழ்க்கை வேண்டும் வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே


என் குல பெண்கள் எல்லாம் தன குலம் செழிக்க வேண்டி

முன்புளத் துயரை விட்டு முகம் மலர பூஜை செய்வார்


மங்களம் எல்லாம் நிறைந்த மகிழ்வான நாட்கள் வேண்டி

வரலக்ஷ்மி விரதம் இருந்தோம் வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே


ஆழியில் அமுதுடன் வந்து ஆலியலை மேலே வாசம் செய்து

வாழி நீ மகளே என்று வாழ்த்துக்கள் இன்றே சொல்லு


பரந்தாமன் பாதம் அமர்ந்து பௌவிய பணிகள் செய்து

வானோரே பருகும் அமுதாய் வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே


மேருவை எந்திரம் செய்து மந்திரம் பலவும் சொல்லி

சுந்தர வடிவே தாயே சுழிமுனை நிறுத்தி உன்னை


சூக்ஷும ஒளியாய் எண்ணி சூடமும் ஏற்றி நின்றோம்

சூது வாது அறியாய் எமக்கு வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே


ஆதியில் சங்கரருக்கு அருள்மழை அன்றே தந்தாய்

நீதியை கேட்கின்றேனே பாவை நான் பணிந்து நின்று


நீதிகள் எல்லாம் சொல்லும் நிர்மலமானத் தாயே

ஈடில்லா செல்வத்தோடு வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே


ஓம் மஹாதேவ்யைச்ச வித்மஹே

விஷ்ணு பதனிச்ச தீமஹி தந்நோ 

லட்சுமிஹி ப்ரோசோதயாத்


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top