எண்கரம் கொண்டு விளங்கிடும் நாயகி - En Karam Kondu LyricsTamil Devotionsl Song Lyrics
Singer - Mahanadhi Shobana

எண்கரம் கொண்டு விளங்கிடும் நாயகி

ஏற்றமளித்திட நீ வருவாய்

எங்களை காத்திட எல்லா வகையிலும்

எந்நேரமும் நீ வருவாய்


பொன்னணி பூண்டிடும் பூமகளே

உன் புன்னகையே ஒரு கவசமாடி

ஜெய ஜெய ஹே மதுசூதன காமினி

விஜயலக்ஷ்மி உன்தாழ் சரணம்


ஜெய ஜெய ஹே மதுசூதன காமினி

விஜயலக்ஷ்மி சர பாலயமாம்


மேற்கு முகத்தினில் நீ விழி வீசிட

மேலைச் சூரியன் ஒளி விடுமே

மேவிடும் வெற்றிகள் விரைவினில் வந்திட

வீரத் திருக்கழல் அருள் தருமே

யாரெனும் போதிலும் உன்னடியாரெனில்

எல்லா நன்மையையும் வந்திடுமே

ஜெய ஜெய ஹே மதுசூதன காமினி

விஜயலக்ஷ்மி உன்தாழ் சரணம்


ஜெய ஜெய ஹே மதுசூதன காமினி

விஜயலக்ஷ்மி சர பாலயமாம்


எழிலறியாசனம் அழகு சுகாசனம்

தாயுன் தரிசனம் திவ்வியமே

எதிரென வருகையில் தவிடென ஆக்கிடும்

உந்தன் வலிமையையும் அற்புதமே

வழித்தவரா ஒரு நிலையினை தந்திட

வண்ண நிலாவுடன் வந்தவளே

ஜெய ஜெய ஹே மதுசூதன காமினி

விஜயலக்ஷ்மி உன்தாழ் சரணம்


ஜெய ஜெய ஹே மதுசூதன காமினி

விஜயலக்ஷ்மி சர பாலயமாம்


பாசக் கயிறுடன் கத்தியை ஏந்திய

கோலம் எமக்கு பக்க பலம்

பகைவரை ஒட்டிட வேகம் எடுக்கும்

சக்கரம் உந்தன் கை சுழலும்

ஆசை மிகுந்த அன்னையுன் புன்னகை

அன்பினில் தவழும் ஞானரதம்

ஜெய ஜெய ஹே மதுசூதன காமினி

விஜயலக்ஷ்மி உன்தாழ் சரணம்


ஜெய ஜெய ஹே மதுசூதன காமினி

விஜயலக்ஷ்மி சர பாலயமாம்


கேடயம் அங்குசம் சங்கம் எல்லாம்

தேடுகழித்திட நாளும் வரும்

கைகளில் தோன்றும் அபயம் வரதம்

உள்ள அமைதியை நாளும் தரும்

ஈடினை இல்லா அழகுடன் அமரும்

இகபரசுகம் தரும் திருமகளே

ஜெய ஜெய ஹே மதுசூதன காமினி

விஜயலக்ஷ்மி உன்தாழ் சரணம்


ஜெய ஜெய ஹே மதுசூதன காமினி

விஜயலக்ஷ்மி சர பாலயமாம்


அன்னம் பணிந்திட ஆண்டருள் செய்திடும்

அகிலஜெயேஸ்வரி நீயம்மா

அத்தனை ஐயமும் தந்திட வந்திடும்

விஜயலக்ஷ்மியும் நீயம்மா

சின்ன உளத்தினில் நாளும் அமர்ந்தருள்

செய்திட வேண்டும் நீயம்மா

ஜெய ஜெய ஹே மதுசூதன காமினி

விஜயலக்ஷ்மி உன்தாழ் சரணம்


ஜெய ஜெய ஹே மதுசூதன காமினி

விஜயலக்ஷ்மி சர பாலயமாம்

ஜெய ஜெய ஹே மதுசூதன காமினி

விஜயலக்ஷ்மி சர பாலயமாம்


விஜயலக்ஷ்மி சர பாலயமாம்

விஜயலக்ஷ்மி சர பாலயமாம்


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Shiva Song Lyrics

Murugan Devotional Songs Lyrics

.

Lakshmi Devotional Songs Lyrics

.