திருப்பரங்கிரி நாதா
ஸ்ரீ முருகன் பக்தி துதி
ராகம்: ஹேமாவதி
தாளம்: ஆதி
பல்லவி
திருப்பரங்கிரி நாதா - உந்தன்
தரிசனம் தரவாதா இப்போதே
அனுபல்லவி
விருப்பமுடன் உன்னை வேண்டினேன் பாடினேன்
விலங்கை ஒத்த வாழ்வில்
உழலும் நான் கடைத்தேற
(திருப்பரங்கிரி)
சரணம்
சேவல் கொடி கொண்டவனே (x2)
செந்தில்பதி நாயகனே
செம்பவள வாயனே அம்பிகை குமாரனே
தேவர் சிறை மீட்டவனே ((x2)
தேனும் திணை உண்டவனே
தேடி உன்னை நாடி வந்தேன்
ஓடி வந்தேன் குறை தீர்ப்பாய்
திருப்பரங்கிரி நாதா - உந்தன்
தரிசனம் தரவாதா இப்போதே
விருப்பமுடன் உன்னை வேண்டினேன் பாடினேன்
விலங்கை ஒத்த வாழ்வில்
உழலும் நான் கடைத்தேற
(திருப்பரங்கிரி)
~~~*~~~
0 comments:
Post a Comment