மாலைராஜன் திருக்கோவில் மணியாடுதே பாடல் வரிகள் - Malairajan Thirukovil Maniyaduthey Lyrics

Kantharaj Kabali
0


அய்யப்பன் பாடல் வரிகள்

Ayyappan Devotionsl Song Lyrics
Singer - K.Veeramani

|| மாலைராஜன் திருக்கோவில் மணியாடுதே
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே ||  x 2||
அபிஷேக‌ மணம் காற்றில் அலைவீசுதே ( x 2)
அய்யப்பன் பதம் தேடி மனம் ஓடுதே ( x 2)

மாலைராஜன் திருக்கோவில் மணியாடுதே
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே

|| வாவென்று வரவேற்கும் ஐயன் மலை
வாழ் நாளில் கடைத்தோற்றம் அருளின் எல்லை || x2||
நாள் தோறும் அருள் வேண்டும் அடியார் உள்ளம்
மழைமேகம் போல் பொங்கும் கருணை வெள்ளம் ( x 2)

மாலைராஜன் திருக்கோவில் மணியாடுதே
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே

|| ஓம் என்று குளிர்காற்று இசைபாடுதே
சபரிமலை மேகம் ஆனந்த நடமாடுதே || ( x 2) ||
நாம் வாழ‌ நல்மார்க்கம் தெளிவாகுதே (x2)
ஆம் என்று அய்யப்பன் அருள் கூறுதே ( x 2)

மாலைராஜன் திருக்கோவில் மணியாடுதே
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே

|| நோன்போடு சாஸ்தாவின் மலை நாடுவோம்
நம் வாழ்வில் அவன் பாதம் துணை தேடுவோம் ||x2||
அடியாரின் அவன் யாவும் அவந்தானே ஆட்சி (x2)
அய்யப்பன் பெருமைக்கு அடியாரே சாட்சி ( x 2)

மாலைராஜன் திருக்கோவில் மணியாடுதே
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே
மாலைராஜன் திருக்கோவில் மணியாடுதே
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே

~~~*~~*~~*~~~

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top