Murugan Devotional Song Lyrics
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முத்துக்குமாரனடி அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முத்துக்குமாரனடி அம்மா
மயில் மீது நடமாடி வருவான் முருகன்
மயல் கொண்டு அவனது மலரடி வணங்குவேன்
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
வடிவேலை கைகொண்டு வருவான் முருகன்
வந்த வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
கோழிக்கொடி கொண்டு வருவான் முருகன்
கொடிய வினைத்தீர்த்திடுவான் அம்மா அம்மா
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
வண்ண மயில் மீதேறி வருவான் முருகன்
கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான்
கைவிட்டு விடுவாயோ என்றேன்
கை மேல் அடித்து கைவிடேன் என்றான்
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
மெய் கண்ட தெய்வமடி அம்மா முருகன்
மேலான தெய்வம் இவனன்றி உண்டோ
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
வாழ்வுதனை வளமாக்கி விட்டான் முருகன்
வாழ்கவே வாழ்க வளர்முத்துக் குமரன்
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
அம்மா அம்மா
அம்மா அம்மா
அம்மா
~♤~♤~♤~
