சிவனே சிவனே அழகிய சிவனே பாடல்வரிகள்


 

Singer - Unni Krishnan

சிவனே சிவனே அழகிய சிவனே

அனுதினம் உன்னையே தொழுவேன் சிவனே

அமுதே அருளே அனுபவ பொருளே

பிரவீன் கணக்கை அறியேன் சிவனே 

இதயம் முழுதும் இசையாய் மலரும் 

இறைவா சிவ பூதா 

உன் உருவம் அருவம் உணரும் அருளை 

தருவாய் சிவ பூதா 

அன்னங்கையில் அம்பிகை பதியாய் 

அருளும் சிவ பூதா

என் உள்ளங்கையில் நம்பிக்கை ஒளியாய் 

திகழும் சிவ பூத


ஓம் சிவாய நம, ஓம் சிவாய நம, ஓம் சிவாய நம ஓம்

ஓம் சிவாய நம, ஓம் சிவாய நம, ஓம் சிவாய நம ஓம்  


ஓம் சிவாய நம ஓம், ஓம் சிவாய நம ஓம்

ஓம் சிவாய நம ஓம், ஓம் சிவாய நம ஓம் 

ஓம் சிவாய நம ஓம், ஓம் சிவாய நம ஓம் 

ஓம் சிவாய நம ஓம், ஓம் சிவாய நம ஓம்


சிவனே சிவனே அழகிய சிவனே

அனுதினம் உன்னையே தொழுவேன் சிவனே 

அமுதே அருளே அனுபவ பொருளே

பிரவீன் கணக்கை அறியேன் சிவனே 


சிவன் வடிவாய் சுடரொளியாய் தோற்றம் கொண்ட சூலம் 

வில்வ மரம் தரிசனத்தில் 

சிவனே ஞான ரூபம் 

சிவனடியார் கனவினிலே சிவனே சொன்ன நீதி 

சிலை வடிவாய் பூதவரின் கோவில் வந்த செய்தி 

அம்பிகையின் அதிபதி யாய் அன்பு நிறை அருள் நிதியாய் 

ஹோண்டா ஆயில் கோவில் தரிசனம் கொடுத்திடு ஈஸ்வரனே 

நட்சத்திரம் உத்திரமாய் சக்தி சிவன் சித்திரமாய் 

திருத்தேரில் உற்சவம் நிகழ்த்திடும் பூதவ ராஜாவே 

வாசகம் திரு வாசகம் உன் கோவிலில் நான் பாடுவேன் 

நேசகன் இசை பூக்களாய் மலர் மாலையை நான் சூட்டுவேன் 

சிவ சிவ சிவ என உணர்வினில் கலந்திட 

சிவ முக தரிசனம் நினைவினில் நிறைந்திட 

சிவமேனும் அனுபவம் மனதினில் மலர்ந்திடுமே சிவமே 


சிவனே சிவனே அழகிய சிவனே 

அனுதினம் உன்னையே தொழுவேன் சிவனே 


ஒரு முகமா இருமுகமா இறைவா உந்தன் கோலம் 

மறைமுகமாய் திருமுகமாய் மலர்வாய் எந்தன் நாளும் 

பிறவி எனும் கடலிலே சூழலும் இந்த வாழ்க்கை 

பரமசிவன் உனது அருளால் தெளியும் இந்த யாக்கை 

ஆறறிவு பாசத்தையும் ஆசைகளின் வேஷத்தையும் 

இறைவா உந்தன் திருவடி நிழலிலே சமர்ப்பணம் செய்திடுவேன்

நான் உணரும் தாகத்தையும் ஞானம் பெரும் யோகத்தையும் 

சிவனே உந்தன் திருவருள் மலர அனுகிரகம் அடைந்திடுவேன் 

ஆதவா சிவ பூதவா தமிழ் வேதவா உன்னை போற்றுவேன் 

தாகமாய் இசை கீதமாய் உன் கோவிலில் விளக்கேற்றுவேன் 

சிவ சிவ சிவ என அனைத்திடம் தொழுதிட 

சிவனது திருவடி மலர்களை வணங்கிட 

சிவம் எனும் அனுபவம் மனதில் மலர்ந்திடுமே சிவமே. 


சிவனே சிவனே அழகிய சிவனே

அனுதினம் உன்னையே தொழுவேன் சிவனே 

அமுதே அருளே அனுபவ பொருளே

பிரவீன் கணக்கை அறியேன் சிவனே 

இதயம் முழுதும் இசையாய் மலரும் 

இறைவா சிவ பூதா 

உன் உருவம் அருவம் உணரும் அருளை 

தருவாய் சிவ பூதா 

அன்னங்கையில் அம்பிகை பதியாய் 

அருளும் சிவ பூதா

என் உள்ளங்கையில் நம்பிக்கை ஒளியாய் 

திகழும் சிவ பூத


ஓம் சிவாய நம, ஓம் சிவாய நம, ஓம் சிவாய நம ஓம்

ஓம் சிவாய நம, ஓம் சிவாய நம, ஓம் சிவாய நம ஓம்  


ஓம் சிவாய நம ஓம், ஓம் சிவாய நம ஓம்

ஓம் சிவாய நம ஓம், ஓம் சிவாய நம ஓம் 

ஓம் சிவாய நம ஓம், ஓம் சிவாய நம ஓம் 

ஓம் சிவாய நம ஓம், ஓம் சிவாய நம ஓம்


🔱🔱🔱

 

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Shiva Song Lyrics

Murugan Devotional Songs Lyrics

.

Lakshmi Devotional Songs Lyrics

.