Singer - L.R.Eswari
ஆடிவெள்ளிக் கிழமையன்று
அம்மனுக்கு மஞ்சள் காப்பு
ஆதி சக்தி கருமாரி அம்மனுக்கு
அழகிய மஞ்சள் காப்பு அழகிய மஞ்சள் காப்பு
கூடி அவளைக் கம்பிடுவோர்க்கு கோடி நன்மைகள் பாடு
ஆடியில் அவளை கொண்டாடி ஆயிரம் நாமங்கள் கூறு
ஆடிவெள்ளிக் கிழமையன்று
அம்மனுக்கு மஞ்சள் காப்பு
வேற்காட்டில் கடியிருக்கும் வேப்பிலைக்காரி
கூவும் அன்பர் குறைதீர்க்கம் கோவிந்த மாரி
தாரணியின் தாயவளே நாரணி ஓங்காரி
பாரெல்லாம் படியளக்கம் பரமசிவன் பாரி
ஆடிவெள்ளிக் கிழமையன்று
அம்மனுக்கு மஞ்சள் காப்பு
குங்குமத்தில் குளித்து நிற்பாள் குங்குமக்காரி
மஞ்சளுடன் நிறைந்திருப்பாள் மங்களமாரி
நெஞ்சார துதித்து நின்றால் அணைத்திடுவாள் வாரீர்
அன்னைபோலக் காத்திடுவாள் ஆனந்த சுகுமாரி
ஆடிவெள்ளிக் கிழமையன்று
அம்மனுக்கு மஞ்சள் காப்பு
~~*~~*~~*~~
Blogger Comment
Facebook Comment