ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்
பாத்தா வினை தீரும் பாவமெல்லாம் பறந்தோடும்
காத்தாயி மகமாயி கருணை தெய்வம் மாகாளி
நார்த்தமலை வாழும் எங்கள் நாயகியாம் திரிசூலி
நெஞ்சினிலே நிறைஞ்சிருப்பா நிம்மதியைத் தந்திடுவா
வஞ்சகரின் வாழ்வறுப்பா வந்த வினை தீர்த்திடுவா
மஞ்சளிலே குளிச்சி நிப்பா சிங்காரமாச் சிரிச்சு நிப்பா
தஞ்சம் என்று வந்துவிட்டா தயங்காம காத்து நிப்பா
மல்லிகைச் சரம் தொடுத்து மாலை இட்டோம் - அரிசி
மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் இட்டோம் - அம்மா
துள்ளியே எந்தன் முன்னே வாரும் அம்மா - அம்மா
தூயவளே எந்தன் தாயீ மாரியம்மா!
பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் - உனக்குப்
பாவாடைச் சேலைகளும் கொண்டு வந்தோம்
பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் - உனக்குப்
பாவாடைச் சேலைகளும் கொண்டு வந்தோம்
உன்னிடத்தில் சொல்லாமல்
வேறு எந்த உறவிடத்தில் முறையிடுவேன் தாயே!
எந்தன் அன்னையவள் நீயிருக்க உலகில் -
மற்ற அந்நியரை இவன் கெஞ்சிடுதல் முறையோ அம்மா?
கண்ணீரைத் துடைத்துவிட ஓடி வாம்மா!
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா!
இந்தச் சின்னவனின் குரல்கேட்டு முகம் திருப்பு - அம்மா
சிரித்தபடி என்னைத் தினம் வழி அனுப்பு! - அம்மா
கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும் - அம்மா
காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்!
பண்ணமைக்கும் நாவுனையே பாட வேண்டும் - அம்மா
எல்லோரும் பக்தியுடன் கையெடுத்து உன்னையே கும்பிட வேண்டும்!
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்!
இருப்பதெல்லாம் உன்னுடையது ஆக வேண்டும்!
~~~*~~~
0 comments:
Post a Comment