ஆனந்த தமிழாலே - தமிழ் பாடல்வரிகள் -முருகன் பாடல்
ஆனந்த தமிழாலே பாடவந்தேன்
முருகா உன்னைக் காணக் கண்கோடி வேண்டுமய்யா
மனதார தரிசிக்க வந்தேனய்யா
வேலாலே எனைக் காத்து வினை தீரய்யா
வடிவேலாலே எனைக் காத்து வினை தீரய்யா
திருமுருகாற்றுப்படை குன்றத்திலே
தேவயானையுடன் கந்தன் கல்யாணமே
சூரனின் சம்ஹாரம் திருச்செந்தூரிலே
குமரகுருபரன் பாடினான் பாட்டிலே
உன்னை குமரகுருபரன் பாடினான் பாட்டிலே
ஆனந்த தமிழாலே பாடவந்தேன்
முருகா உன்னைக் காணக் கண்கோடி வேண்டுமய்யா
வேல் வேல் முருகா
வெற்றிவேல் முருகா
அபிஷேகத் திருநீறு மருந்தாகுமே
தென்பழநி முருகன் சன்னதியிலே
ஓம் எனும் ப்ரணவம் சொன்ன மலை
சுவாமிநாதா நீ வாழும் சுவாமிமலை
ஆனந்த தமிழாலே பாடவந்தேன்
முருகா உன்னைக் காணக் கண்கோடி வேண்டுமய்யா
படியெல்லாம் பாடும் திருப்புகழை
அடியவர் பிணி தீர்க்கும் திருத்தணிகை
கூடல் மாநகரில் குடிகொண்ட குகனே
குஞ்சரி வள்ளியுடன் வீற்றிருப்பாய் சோலையிலே