சக்தி என்றாலவள் ஒரே சக்தி
அம்மன் பாடல் வரிகள்
NO AUDIO
சக்தி என்றாலவள் ஒரே சக்தி
சர்வமும் கை கொண்ட பராசக்தி
சாதனையைச் செய்கின்ற ஓம் சக்தி
சோதனைகள் தருகின்ற தெய்வசக்தி
மாங்காடு தன்னிலவள் காமாட்சி
மதுரை மண்ணிலவள் மீனாட்சி
காஞ்சியிலே இன்றைக்கும் காமாட்சி
காசியிலே என்றென்றும் விசாலாட்சி
ஆறாக அவளருள் ஓடிவரும்
தேராக அவளுருவம் ஆடிவரும்
தேனாக மனதினில் நின்று விடும்
தேடும்வரம் எல்லாமே தந்துவிடும்
பூவாக மலர்கின்ற மென்மையவள்
பூநாகம் போல உலவும் தன்மையவள்
நானென்றும் அவளழகை பாடிடுவேன்
நலமோடு பலகாலம் வாழ்ந்திடுவேன் அம்மா
~♤~♤~♤~