<<< NO AUDIO>>>
நெஞ்சுருகப்பாடுகின்றோம் வருவாய்
அம்மன் பாடல் வரிகள்
நெஞ்சுருகப்பாடுகின்றோம், வருவாய்
நெறியுடனே வேண்டுகின்றோம், தருவாய்
மனமுருக வாழ்த்துகின்றோம், அருள்வாய்
மனைமுழுதும் போற்றுகின்றோம், மகிழ்வாய்
சோராமல் உன்னையே வணங்குகின்றோம்
சோதனையைச் செயலாலே மறக்கின்றோம்
ஆறாக ஓடிவந்து ஆட்கொள்வாய்
அன்பாக மனநோயை ஆற்றிடுவாய்
கண்களிலே வெகுநாளாய்க் கார்காலம்
கருணையினால் மாற்றிடுவாய் வசந்தகாலம்
என்னாளும் உன்னுடனே எம் எதிர்காலம்
எல்லாமே எங்களின் நல்லகாலம்
இருளில்கூட ஒளிவீசும் உந்தன் வாசலில்
இதயம் கூட வாடிப்போகும் உந்தன்பிரிவில்
இணையில்லாத சக்தியம்மே உந்தன் உறவில்
இன்பமுடன் வாழ்ந்திடுவோம் நல்லநினைவில் அம்மா
~~~*~~~