Singer - P.Susheela
Thiruvilakai Yetri Vaithom
Thirumagale Varuga Lyrics
ஆதிலட்சுமி தேவிக்கு
அழகாய் விளக்கேற்றி
பஞ்சுத் திரி போட்டு
பசும் நெய் தனை ஊற்றி
குங்குமத்தில் பொட்டிட்டு
கோல மஞ்சள் தானும்
இட்டு
பூமாலை சூட்டி வைத்து
பூசிப்போம் உன்னை திருமகளே
திருவிளக்கை ஏற்றி வைத்தோம்
திருமகளே வருக
குலம் விளங்க எங்கள் வீட்டில்
கொலுவிருக்க
வருக
அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக
அலைமகளே வருக
ஐஸ்வர்யம் தருக
திருவிளக்கை ஏற்றி வைத்தோம்
திருமகளே வருக
குலம் விளங்க எங்கள் வீட்டில்
கொலுவிருக்க
வருக
வாசலிலே மாக்கோலம்
வீட்டினிலே லட்சுமீகரம்
வாசலிலே மாக்கோலம்
வீட்டினிலே
லட்சுமீகரம்
நெற்றியிலே ஸ்ரீசூர்ணம்
நெஞ்சினிலே லட்சுமீகரம்
அம்மா நீ ஆதரித்தால்
அகிலமெல்லாம் இன்ப
மயம்
அஷ்டமா சித்தியுடன்
லோகமெல்லாம் சேம மயம்
அஷ்டமா சித்தியுடன்
லோகமெல்லாம் சேம மயம்
அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக
அலைமகளே வருக
ஐஸ்வர்யம் தருக
மாவிலையும் தோரணமும்
மங்கலத்தின் அடையாளம்
மாவிலையும் தோரணமும்
மங்கலத்தின்
அடையாளம்
ஊதுவத்தி எரிவதினால்
உள்ளத்திலும் ஒரு வாசம்
அம்மா நீ அருள் புரிந்தால்
அகிலமெல்லாம்
அலங்காரம்
அன்றாடம் பாடிடுவோம்
அஷ்டலட்சுமி திருநாமம்
அன்றாடம்
பாடிடுவோம்
அஷ்டலட்சுமி திருநாமம்
சங்கு சக்ரதாரி நமஸ்காரம்
சகல வரம் தருவாய்
நமஸ்காரம்
பத்மபீட தேவி நமஸ்காரம்
பக்தர் தம்மைக் காப்பாய் நமஸ்காரம்
0 comments:
Post a Comment