Singer - Saradha Raghav
பாசி படர்ந்த மலை முருகய்யா
பங்குனித் தேர் ஓடும் மலை முருகய்யா
ஊசி படர்ந்த மலை முருகய்யா
உத்திராட்சம் காய்க்கும் மலை முருகய்யா
மலைக்குள் மலை நடுவே முருகய்யா
மலையாள தேசமப்பா முருகய்யா
மலையாள தேசம் விட்டு முருகய்யா
மயிலேறி வருவாயிப்போ முருகய்யா
அந்தமலைக் குயர்ந்த மலை முருகய்யா
ஆகும் பழனி மலை முருகய்யா
எந்த மலையைக் கண்டு முருகய்யா
ஏறுவேன் சந்நிதி முன் முருகய்யா
ஏறாத மலைதனிலே முருகய்யா
ஏறிநின்று தத்தளிக்க முருகய்யா
பாராமல் கை கொடுப்பாய் முருகய்யா
பழனிமலை வேலவனே முருகய்யா
அஞ்சுகைக் கெஞ்சிவர முருகய்யா
அழகு சடை மேற்புரள முருகய்யா
குஞ்சு சடை மேதினிலே முருகய்யா
குயிலிருந்து கூவுதப்பா முருகய்யா
வேலெடுத்து கச்சை கட்டி முருகய்யா
விதவிதமா மயிலேறி முருகய்யா
கோலாகலத்துடனே முருகய்யா
குழந்தை வடிவேலவனே முருகய்யா
உச்சியில் சடையிருக்க முருகய்யா
உள்ளங்கை வேலிருக்க முருகய்யா
About Kantharaj Kabali