அந்தா வர்றார் ஐயப்பா பாடல்வரிகள் - Antha Varar Ayyappa Song Lyrics
Swami Ayyappa Devotional Song Lyrics

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

சன்னதி விட்டிறங்கி சாஸ்தா வர்றார் பாரப்பா
பதினெட்டாம்  படியிறங்கி பார்க்க வர்றார் ஐயப்பா

சரங்குத்தி எல்லை விட்டு சாஸ்தா வர்றார் பாரப்பா
சக்தி உமை பாலனாக காட்சி தர்றார் ஐயப்பா

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

சபரியின் பீடம் விட்டு தாண்டி வர்றார் ஐயப்பா
சாந்த ஸ்வரூபனாக காட்சி தர்றார் ஐயப்பா

நீலிமலை தான் கடந்து நேரே வர்றார் ஐயப்பா
நித்ய பிரம்மச்சாரியாக காட்சி தர்றார் ஐயப்பா

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா
         
பம்பாநதி தான் கடந்து பார்க்க வர்றார் ஐயப்பா
பம்பையின் பாலனாக காட்சி தர்றார் ஐயப்பா

 கரிமலை உச்சி தாண்டி ஓடி வர்றார் ஐயப்பா
காவலுக்கு கருப்பனையே கூட்டி வர்றார் ஐயப்பா

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

அழுதாமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா
ஹரிஹர புத்திரனாய் காட்சி தர்றார் ஐயப்பா

காளைக்கட்டி தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா
காந்தமலை ஜோதியாக காட்சி தர்றார் ஐயப்பா

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

எரிமேலி பேட்டைத் துள்ளி இங்கே வர்றார் ஐயப்பா
ஏகாந்த மூர்த்தியாக காட்சி தர்றார் ஐயப்பா

பந்தளத்து தேசம் விட்டு பார்க்க வர்றார் ஐயப்பா
பக்தருக்கு பக்தனாக காட்சி தர்றார் ஐயப்பா

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

குளத்துப்புழை தான் கடந்து கூவி வர்றார் ஐயப்பா
குழந்தை உமை பாலனாக காட்சி தர்றார் ஐயப்பா

அச்சன் கோவில் தான் கடந்து அந்தா வர்றார் ஐயப்பா
அரசனாக அருளோடு காட்சி தர்றார் ஐயப்பா

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா
                       
ஆரியங்காவு தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா
ஆனந்த ரூபனாக காட்சி தர்றார் ஐயப்பா

குற்றாலம் தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா
குமர குருபரனைக் கூட்டி வர்றார் ஐயப்பா

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

மதுரையின் எல்லையிலே மணிகண்டன் ஐயப்பா
மதுரை நகர் பக்தருக்கு காட்சி தர்றார் ஐயப்பா

யாத்திரை  குழுவிற்கு வந்து விட்டார் ஐயப்பா 
ஐயப்பன் படத்தினிலே அமர்ந்து விட்டார் ஐயப்பா 

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா


 🌺🌺🌺ஸ்வாமியே சரணம் ஐயப்பா🌺🌺🌺

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Shiva Song Lyrics

Murugan Devotional Songs Lyrics

.

Lakshmi Devotional Songs Lyrics

.