நெய் மணக்கும் ஐயன் மலை - Nei Manakkum Ayyan Malai Lyrics

நெய் மணக்கும் ஐயன் மலை
Singer - K. Veeramani

நெய் மணக்கும் ஐயன் மலை
நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை
மேன்மைதரும் தெய்வமலை
மணிகண்டன் வாழும் மலை

மேன்மைதரும் தெய்வமலை
மணிகண்டன் வாழும் மலை
சபரிமலை அபயமலை
சபரிமலை அது அபயமலை
சபரிமலை அபயமலை
சபரிமலை அது அபயமலை
சபரிமலை அது அபயமலை

வேண்டியதைக் கொடுக்கும் மலை
வேந்தனது சாந்த மலை
ஆண்டவனும் ஜோதியாக
காட்சி தரும் காந்த மலை
ஆண்டவனும் ஜோதியாக
காட்சி தரும் காந்த மலை
ஆண்டுக்காண்டு அழைக்கும் மலை
நம்மை மீண்டும் போகத் தூண்டும் மலை
ஆண்டுக்காண்டு அழைக்கும் மலை
நம்மை மீண்டும் போகத் தூண்டும் மலை
ஆனந்தம் காணும் அழகு மலை
ஐயப்பன் ஆலயம் கொண்ட மலை


நெய் மணக்கும் ஐயன் மலை
நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை
மேன்மைதரும் தெய்வமலை
மணிகண்டன் வாழும் மலை
மேன்மைதரும் தெய்வமலை
மணிகண்டன் வாழும் மலை
சபரிமலை அபயமலை
சபரிமலை அது அபயமலை
சபரிமலை அபயமலை
சபரிமலை அது அபயமலை

சித்தர்களும் சூளும் மலை
பக்தர்களும் கூடும் மலை
முக்தி தரும் தேவன் மலை
சக்திபீடம் கொண்ட மலை
முக்தி தரும் தேவன் மலை
சக்திபீடம் கொண்ட மலை
கற்பூரம் ஜொலிக்கும் மலை
களபம் மணம் வீசும் மலை
கற்பூரம் ஜொலிக்கும் மலை
களபம் மணம் வீசும் மலை
அற்புதமாய் ஐயப்பன் 
அருளாட்சி புரியும் மலை
அற்புதமாய் ஐயப்பன் 
அருளாட்சி புரியும் மலை

நெய் மணக்கும் ஐயன் மலை
நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை
மேன்மைதரும் தெய்வமலை
மணிகண்டன் வாழும் மலை
சபரிமலை அபயமலை
சபரிமலை அது அபயமலை
சபரிமலை அபயமலை 
சபரிமலை அது அபயமலை
சபரிமலை அது அபயமலை

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Shiva Song Lyrics

Murugan Devotional Songs Lyrics

.

Lakshmi Devotional Songs Lyrics

.