திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம் பாடல் வரிகள்

Kantharaj Kabali
0

Tirumalai-Peruaml-temple



Singer – T.R.Mahalingam

திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம் (x2)
தீராத வினையெல்லாம் தீர்த்திடும் தெய்வம் (x2)

திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்

 வரும் துயர் பகையாவும் மாற்றிடும் தெய்வம் (x2)
வாய் திறந்தே கேட்டால் வழங்கிடும் தெய்வம்  (x2)


திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்


மன்னுபுகழ் கோசலைக்கு மைந்தனான தெய்வம் (x2)
மண்மகளும் மலர்மகளும் மருவுகின்ற தெய்வம் (x2)
தென் பொதிகை முனிவர் தொழும் திருவேங்கடதெய்வம் (x2)
ஸ்ரீநிவாசனாக நின்று சேவை தரும் தெய்வம் (x2)

திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்
தீராத வினையெல்லாம் தீர்த்திடும் தெய்வம்
திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்


கொண்டாடும் அன்பர் நெஞ்சில் கோவில் கொண்ட தெய்வம் (x2)
கோவிந்தா என்றழைத்தால் குறைகள் தீர்க்கும் தெய்வம் (x2)
சந்தமும் சங்கு சக்கரம் தாங்குகின்ற...தெய்வம் (x2)
சாரங்கபாணியென்ற பார்புகழும் தெய்வம்.(x2)

திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்
தீராத வினையெல்லாம் தீர்த்திடும் தெய்வம்
திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top