மூகாம்பிகையே லோகாம்பிகையே பாடல் வரிகள்- Mookambigaiye Logambigaiye Song Lyrics
Kantharaj Kabali
0
Moogambikai Devi Devotional Song Lyrics
Movie : Harihara Puthiran (1992)
Singer - K.J.Yesudas
மூகாம்பிகையே லோகாம்பிகையே
ஜகம் புகழ் மகராணியே
மாதேஸ்வரியே யோகேஸ்வரியே
மறை தொழும் திருமேனியே
அழகே நல் அடியார் மனம்
அனைத்தும் உன் அரியாசனம்
அழுதால் உன்னை தொழுதால்
பெற்ற தாயைப் போல நோயை தீர்க்கும்
மூகாம்பிகையே லோகாம்பிகையே
ஜகம் புகழ் மகராணியே
மாதேஸ்வரியே யோகேஸ்வரியே
மறை தொழும் திருமேனியே....
மூகன் எனும் மூடன் உன் மகிமை அறிய
சுடராய் எழுந்தாய் சங்கரியே
மூளும் வினையாவும் ஓர் நொடியில் அழிய
புயலாய் விழைந்தாய் பைரவியே
குடசாத்திரியோரம் கொல்லூரில் வாழும்
ஞான வள்ளி நீயே, நலங்கள் சேர்க்கும் தாயே
கடல் வானம் பூமி கைகூப்பி ஏத்தும்
தேவ தேவி நீயே திசைகள் போற்றும் தாயே
ஆதாரம் என்றான ஆதிசக்தி அம்மையே
மூகாம்பிகையே லோகாம்பிகையே
ஜகம் புகழ் மகராணியே
மாதேஸ்வரியே யோகேஸ்வரியே
மறை தொழும் திருமேனியே
அழகே நல் அடியார் மனம்
அனைத்தும் உன் அரியாசனம்
அழுதால் உன்னை தொழுதால்
பெற்ற தாயைப் போல நோயை தீர்க்கும்
மூகாம்பிகையே லோகாம்பிகையே
ஜகம் புகழ் மகராணியே
மாதேஸ்வரியே யோகேஸ்வரியே
மறை தொழும் திருமேனியே....
ஈசன் நடராசன் மலைவாசன் உடலில்
இடமாய் உறையும் அம்பிகையே
வாழும் உயிர் யாவும் வரம் வேண்டும் பொழுது
அருளாய் பொழியும் சுந்தரியே
அபிராமி பட்டர் அந்தாதி பாட
நிலவைக் காட்ட நீயே நேரில் வந்த தாயே
கவிகாளமேகம் தமிழ் சிந்து கூற
அர்த்தஜாமம் நீயே அமுதம் தந்த தாயே
செவ்வாடை மருவூரில் சூடி நிற்கும் அன்னையே
மூகாம்பிகையே லோகாம்பிகையே
ஜகம் புகழ் மகராணியே
மாதேஸ்வரியே யோகேஸ்வரியே
மறை தொழும் திருமேனியே
அழகே நல் அடியார் மனம்
அனைத்தும் உன் அரியாசனம்
அழுதால் உன்னை தொழுதால்
பெற்ற தாயைப் போல நோயை தீர்க்கும்
மூகாம்பிகையே லோகாம்பிகையே
ஜகம் புகழ் மகராணியே
மாதேஸ்வரியே யோகேஸ்வரியே
மறை தொழும் திருமேனியே....