காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - Kavadigal Adi Varum Attathile Lyrics

Kantharaj Kabali
0

Murugan Devotional Song Lyrics
Singers - Sulamangalam Sisters

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா ஆட்டத்திலே
ஆடல் கண்டு எந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

பால் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா ஆட்டத்திலே
ஆடல் கண்டு எந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

பால் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே...



சேவடியைக் காணவென்றே ஓடிவருவார்
சிந்தையிலே உந்தனையே பாடிவருவார்
சேவடியைக் காணவென்றே ஓடிவருவார் - அவர்
சிந்தையிலே உந்தனையே பாடிவருவார்
முருகா பாடிவருவார்

மச்சக் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே



ஏறாத மலையினிலே ஏறிவருவார்
ஏறுமயில் வாகனனை காணவருவார்
ஏறாத மலையினிலே ஏறிவருவார்
ஏறுமயில் வாகனனை காணவருவார்
உள்ளவனும் இல்லார் என்ற பேதமில்லை
வள்ளல் உந்தன் அன்புக்கோர் எல்லை இல்லை
உள்ளவனும் இல்லார் என்ற பேதமில்லை - அருள்
வள்ளல் உந்தன் அன்புக்கோர் எல்லை இல்லை
முருகா எல்லை இல்லை

பன்னீர் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே 



தேரோடும் வீதியெங்கும் கூடியிருப்பார்
தெய்வயானை அம்மையுடன் கண்டு களிப்பார்
தேரோடும் வீதியெங்கும் கூடியிருப்பார் - வள்ளி
தெய்வயானை அம்மையுடன் கண்டு களிப்பார்
முருகா கண்டு களிப்பார்

பூங்காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே-  முருகா ஆட்டத்திலே
ஆடல் கண்டு எந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

பால் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே...


~~~☆~~~

Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top