Tamil God Murugan Devotional Song Lyrics
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வீர வேல் முருகனுக்கு அரோகரா
ஜான வேல் முருகனுக்கு அரோகரா
கந்தா நீ தேரெறி கடம்பா உன் வீரம் சூடி
கொட்டு முரசு கொட்ட வாருமையா
ஆறு படையில கோடி பேருல ஆருமுகனே ஓ வீரம்
கந்தா பாதம் பின்னே நித்தம்நடந்திருந்தா
அச்சம் மிச்சம் இன்றி போகாதா
முருகன் முடிவெடுக்க சிவனும் கேட்டிருக்க
வெற்றி வேலனுக்கு அரோகரா
கந்தா நீ தேரெறி கடம்பா உன் வீரம் சூடி
கொட்டு முரசு கொட்ட வாருமைய...
♪..♫..♪..♫..♪..♫..♪..♫
தமிழ் சங்கமே முதல் சங்கமாய்
அண்டமெல்லாம் அறிய வைச்சி
வேலும் மயிலுன்னு கொடி எடுத்து
உலக ஆள வந்த தமிழ் வீரனே
வேலும் மயிலுன்னு கொடி எடுத்து
உலக ஆள வந்த தமிழ் வீரனே
முருக ஆண்ட ஆட்சி இருக்க நெஞ்சில் அமிர்தமாய்
முருகன் சொல்லே வேத வாக்கு அச்சம் தவிருமா
பழனி முருகன் பார்க்க வரவே படை எடுத்தோம்
எட்டு திக்கும் முருகன் ஆட்சி தமிழ் பெருமையே
சுவாமி மலையனே... வேல் யேந்தி வா
தணிகை வேலவா... குறைகள் தீர்க்க வா
குறைகள் தீர்க்கவா
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையிலுளபேரு
மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா
பொங்குகடலுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில்செறிரூப
தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு...... பெருமாளே
பெருமாளே
கந்தா நீ தேரெறி கடம்பா உன் வீரம் சூடி
கொட்டு முரசு கொட்ட வாருமையா
கந்தா நீ தேரெறி கடம்பா உன் வீரம் சூடி
கொட்டு முரசு கொட்ட வாருமையா
