கஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி

Kantharaj Kabali
0

Kamatchi Devotional Song Lyrics
ஸ்ரீ அம்பாள் துதி – Sri Ambal Thuthi

கஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சிகாசி விசாலாட்சி 
கருணாம்பிகையே தருணம் இதுவே தயை புரிவாய் அம்மா
கஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி 
கருணாம்பிகையே தருணம் இதுவே தயை புரிவாய் அம்மா

உன்னருள் என்றும் நிலைபெற
வேண்டும் நீ வருவாய் அம்மா
உன்னருள் என்றும் நிலைபெற
வேண்டும் நீ வருவாய் அம்மா

பொன் பொருள் எல்லாம் வளம்
பெற வேண்டும் வாழ்த்திடுவாய் அம்மா
பொன் பொருள் எல்லாம் வளம்
பெற வேண்டும் வாழ்த்திடுவாய் அம்மா
ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய் 
என் அன்னை நீயம்மா
ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய் 
என் அன்னை நீயம்மா
நின் முகம் கண்டேன் என் முகம்
மலராய் மலர்ந்ததும் ஏனம்மா
நின் முகம் கண்டேன் என் முகம்
மலராய் மலர்ந்ததும் ஏனம்மா

கஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி 
கருணாம்பிகையே தருணம் இதுவே தயை புரிவாய் அம்மா

மங்களம் வழங்கிடும் மகிமையை கண்டேன் 
உன் திருக்கரத்தினிலே
மங்களம் வழங்கிடும் மகிமையை கண்டேன் 
உன் திருக்கரத்தினிலே
எங்கும் வருவாய் என்னுயிர் நீயே
எங்கள் குலதேவி
எங்கும் வருவாய் என்னுயிர் நீயே
எங்கள் குலதேவி
சங்கடம் தீர்ப்பாய் பாக்களைத் தருவேன்
சங்கத் தமிழினிலே
சங்கடம் தீர்ப்பாய் பாக்களைத் தருவேன்
சங்கத் தமிழினிலே
தங்கும் புகழை தடையின்றி தருவாய்
தயக்கமும் ஏனம்மா
தங்கும் புகழை தடையின்றி தருவாய்
தயக்கமும் ஏனம்மா

கஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி 
கருணாம்பிகையே தருணம் இதுவே தயை புரிவாய் அம்மா

பயிர்களில் உள்ள பசுமையை கண்டேன்
பரமேஸ்வரி உனையே
பயிர்களில் உள்ள பசுமையை கண்டேன்
பரமேஸ்வரி உனையே
உயிர்களில் உள்ள உன்னருள் உண்மை
உலக மகாசக்தி
உயிர்களில் உள்ள உன்னருள் உண்மை
உலக மகாசக்தி
சரண் உனை அடைந்தேன் சங்கரி தாயே
சக்தி தேவி நீயே
சரண் உனை அடைந்தேன் சங்கரி தாயே
சக்தி தேவி நீயே
அரன் எனக் காப்பாய் அருகினில் வருவாய்
அகிலாண்டேஸ்வரியே
அரன் எனக் காப்பாய் அருகினில் வருவாய்
அகிலாண்டேஸ்வரியே

கஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி 
கருணாம்பிகையே தருணம் இதுவே தயை புரிவாய் அம்மா

அம்மா...அம்மா...அம்மா...அம்மா...

~~~☆~~~

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top