Amman Song Lyrics
அம்மன் பாடல்வரிகள்
தேவி கருமாரி அம்மா
ஸ்ரீதுர்கை அம்மா
காமாட்சி அம்மா
மீனாட்சி அம்மா
சுந்தரி சௌந்தரி
கௌமாரி சுகுமாரியே...
அன்னை அபிராமி நீயே
சிவகாமி தாயே
உமையவள் நீயே
உலகாளும் தாயே
ஓம்காரி வாராகி
ஸ்ரீகாளி திரிசூலியே...
அவதார ரூபங்களில் - அலங்கார
திருமேனி வடிவானவள்
அபிஷேக ஆராதனை - அனுதினமும்
பூஜைகள் ஏற்கின்றவள்
தேவி கருமாரி அம்மா
ஸ்ரீதுர்கை அம்மா
காமாட்சி அம்மா
மீனாட்சி அம்மா
சுந்தரி சௌந்தரி
கௌமாரி சுகுமாரியே...
உனதன்பு நீரோடையில் - கயற் கன்னி
நித்தமும் நீராடினோம்
ஒளி வீசும் உன் பார்வையில் - அருள் பொங்க
குங்குமம் தான் சூடினோம்
நாளெல்லாம் சொன்னாலுமே - அம்மா உன்
பெருமைகள் தீராதம்மா
அற்புதங்கள் அரங்கேறுமே - அதைச் சொல்ல
ஒரு ஜென்மம் போதாதம்மா
தரிசனமும் உன் ரூபமே - தாயே உன்
கரிசனமும் தான் போதுமே
கண்மலரில் ஒற்றிக் கொள்வோம் - தேவி உன்
பாதமலர் தான் போதுமே
தேவை எதும்.. கேட்காமலே..
தந்தாலும் ஒரு தெய்வமே...
தேவி கருமாரி அம்மா
ஸ்ரீதுர்கை அம்மா
காமாட்சி அம்மா
மீனாட்சி அம்மா
சுந்தரி சௌந்தரி
கௌமாரி சுகுமாரியே...
சர மலர் மாலைகளும் - உன் தோளில்
சூடி மனம் மகிழ்கின்றதே
வாழ்வெனும் சோலை அதில் - வெற்றி மலர்
தினம் கூடி வருகின்றதே
கரையாத வண்ணங்களாய் - நெஞ்சமதும்
நிறைவாக உணர்கின்றதே
சிலையாக நின்றாளுமே - கலையாமல்
உன் புகழ் நிலைக்கின்றதே
கருணையே உருவானவள் - ஆனந்தக்
கண்ணீரில் உறைகின்றவள்
அன்னையாய் ஆள்கின்றவள் - எமை என்றும்
இமை போல காக்கின்றவள்
உன் ஆலயம்.. பொன் கோபுரம்..
வழிகாட்டும் விடிவெள்ளியே...
தேவி கருமாரி அம்மா
ஸ்ரீதுர்கை அம்மா
காமாட்சி அம்மா
மீனாட்சி அம்மா
சுந்தரி சௌந்தரி
கௌமாரி சுகுமாரியே...
அன்னை அபிராமி நீயே
சிவகாமி தாயே
உமையவள் நீயே
உலகாளும் தாயே
ஓம்காரி வாராகி
ஸ்ரீகாளி திரிசூலியே...
~~~ * ~~~