Amman Devotional Song Lyrics
Singer -L.R.Eswari
முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்
முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்
முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்
முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்
சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் - அவள்
சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம்
முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்
முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்
பாலோடு பன்னீரும் அபிஷேகமாம் - அவள்
பொன்மேனி மலர்களிலே அலங்காரமாம்
பாலோடு பன்னீரும் அபிஷேகமாம் - அவள்
பொன்மேனி மலர்களிலே அலங்காரமாம்
மங்கலக் குங்குமத்தில் திலகமாம் - அவள்
மஞ்சள் நிற ஆடை கட்டி வந்திடுவாளாம்
முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்
முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்
திரிசூலம் கையில் கொண்ட திரிசூலியாம் - அவள்
திக்கெட்டும் காத்து வரும் காளியம்மனாம்
திரிசூலம் கையில் கொண்ட திரிசூலியாம் - அவள்
திக்கெட்டும் காத்து வரும் காளியம்மனாம்
கற்பூரச் சுடரினிலே சிரித்திடு வாளாம் - அவள்
தீராத நோயெல்லாம் தீர்த்திடுவாளாம்
முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்
முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்
சர்க்கரையில் பொங்கலிட மகிழ்ந்திடுவாளாம்
நெய் விளக்கேற்றி வணங்கிடவே வரம் தருவாளாம்
சர்க்கரையில் பொங்கலிட மகிழ்ந்திடுவாளாம்
நெய் விளக்கேற்றி வணங்கிடவே வரம் தருவாளாம்
முழங்கி வரும் முரசங்களை கேட்டிடுவாளாம் - அவள்
முன்னின்றே நல்லருளைத் தந்திடுவாளாம்
முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்
முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்
~~~ * ~~~