Venkatesa Devotional Song Lyrics in Tamil
வந்த வினை எல்லாம் உந்தன் பெயர் சொல்ல
வெந்து உடன் விலகும் வேங்கடேசா!
அன்பில் உன்னைக் காண நெஞ்சம் தெளிவாகும்
வந்து உன் மலை சேர்ந்தேன் சீனிவாசா!
வந்து உன் மலை சேர்ந்தேன் சீனிவாசா!
திருமலை கோவிந்தா திருவுடன் திகழ் நாதா!
ஒருமுறை சரணென்றால் உன் உலகமே தரும் வேதா!
திருமலை கோவிந்தா திருவுடன் திகழ் நாதா!
ஒருமுறை சரணென்றால் உன் உலகமே தரும் வேதா!
மேல் இருக்கும் தேவர் உனைக் காண இறங்க
தாள் விரும்பும் மக்கள் மலை யேறி வணங்க
பா வெடுக்கும் ஆழ்வார் தமிழில் நீமயங்க
சீர் கொள்ளும் தேசிகர் புகழ்மாலை விளங்க
ஒளிதிகழ் உத்தமனே! உன் சீர்பதம் பெற்றிடவே
மகிழ்வுடன் தாயவளின் பரிந்துரை கொண்டேனே!
ஒளிதிகழ் உத்தமனே! உன் சீர்பதம் பெற்றிடவே
மகிழ்வுடன் தாயவளின் பரிந்துரை கொண்டேனே!
வந்த வினை எல்லாம் உந்தன் பெயர் சொல்ல
வெந்து உடன் விலகும் வேங்கடேசா!
அன்பில் உன்னைக் காண நெஞ்சம் தெளிவாகும்
வந்து உன் மலை சேர்ந்தேன் சீனிவாசா!
வந்து உன் மலை சேர்ந்தேன் சீனிவாசா!
மண்மகள் முகத்திலகம் ஆகுமுன் கோலம்
கண்ணெனக் காத்திடும் கார்கொண்ட நீலம்
விண்ணெதும் வேண்டாமே விழிகருணை போதும்
எண்ணமும் நிறைவேறும் வேறென்ன வேண்டும்
திருமகள் வசமுடையாய்! திருவருள் நிறையுடையாய்!
பரிவுடன் நின்றிடுவாய்! பதமதைத் தந்திடுவாய்!
திருமகள் வசமுடையாய்! திருவருள் நிறையுடையாய்!
பரிவுடன் நின்றிடுவாய்! பதமதைத் தந்திடுவாய்!
வந்த வினை எல்லாம் உந்தன் பெயர் சொல்ல
வெந்து உடன் விலகும் வேங்கடேசா!
அன்பில் உன்னைக் காண நெஞ்சம் தெளிவாகும்
வந்து உன் மலை சேர்ந்தேன் சீனிவாசா!
வந்து உன் மலை சேர்ந்தேன் சீனிவாசா!
சீனிவாசா... கோவிந்தா...
சீனிவாசா... கோவிந்தா...
~~*~~~
~~~கோவிந்தா~கோவிந்தா~ கோவிந்தா~~~