தக தக தக தக தக தங்க கூரை அணிந்தாலும் பாடல்வரிகள் - Thaga Thaga Thanga Koorai Aninthalum Lyrics

Kantharaj Kabali
0


 Swami Ayyappa Devotional Song Lyrics

Singers -K.J.Yesudas and Vijay Yesudas


என் மனமோ ஐய்யா உன் அன்புரதம் பகவானே 

நீ அதிலே நாளும் வளம் வரணும் நாள்தோறும் 

உன் வழியில் சொல்லிடுவோம் ஒரு சரணம் மலைமீது 

உன் செவியில் அது தேனாய் பாய்ந்திடனும்


தக தக தக தக தக தங்க கூரை அணிந்தாலும் 

துளசி மாலை அணிந்தாலும்  

அய்யனூர் சபரி மலை......மேல் 

இருப்பது தியான நிலை 


அலை அலை அலை அலைகடல் போல பொங்கிவழிந்தாலும்

பக்தர் பொங்கிவழிந்தாலும் 

ஏதோ ஓர் காந்த அலை ஈர்க்கின்ற காந்த மலை 


நானொரு புதுவித யாகம் என் நெஞ்சின் மையத்தில் 

நாளும் செய்துடுவேனே உனை என்னும் நேரத்தில் 

யாகத்தின் வேள்வியிலே ஐயனின் பொன்னுருவம் 

கைகளில் ஏந்தி வந்தால் அமிர்த பொன் கலசம் 


தக தக தக தக தக தங்க கூரை அணிந்தாலும் 

துளசி மாலை அணிந்தாலும்  

அய்யனூர் சபரி மலை......மேல் 

இருப்பது தியான நிலை

♫♫♫♫♫♫♫


ஸ்ரீ ரகுராமன் கானகவாசம் செய்கையிலும்கூட

தம்பி லக்ஷ்மணனும் அவன் துணையாய் சென்றானே

பரதனுக்கும் தன் நெஞ்சுக்குள் அவ்வெண்ணம் இருந்தாலும்

ராமர் சொற்படி நாட்டை ஆண்டாரே

நாம் அதுபோலே சீராய் நம் கடமைகள்  செய்வோம்

கடமையினூடே  சபரி தெய்வம் காண்போம் 

நாம் அதுபோலே சீராய் நம் கடமைகள்  செய்வோம்

கடமையினூடே  சபரி தெய்வம் காண்போம் 

சந்நியாசமா கிரகஸ்தமா தெய்வம் பார்ப்பதில்லை 

அன்பன்றி வேறு ஏதும் கேட்பதில்லை 


என் மனமோ ஐய்யா உன் அன்புரதம் பகவானே 

நீ அதிலே நாளும் வளம் வரணும் நாள்தோறும் 

உன் வழியில் சொல்லிடுவோம் ஒரு சரணம் மலைமீது 

உன் செவியில் அது தேனாய் பாய்ந்திடனும்

♫♫♫♫♫♫♫


வைகுண்டத்தில் சயனிக்கும் பெருமாளின் சௌந்தர்யம் 

அய்யன் ஐயப்பன் உன் விழியில் நான் கண்டேன் 

கைலாயத்தில்  சந்திரமௌலீஸ்வரணின் கைங்கர்யம் 

வில் ஏந்தும் அய்யன் வீரத்தில் கண்டேன்  

சிவனருள் பாதி திருமாலின் உருமருவாகி 

இருவரும் ஒன்றே இது ஐயன் சொல்லும் செய்தி 

சிவனருள் பாதி திருமாலின் உருமருவாகி 

இருவரும் ஒன்றே இது ஐயன் சொல்லும் செய்தி 


பஞ்சாட்சரம் நாராயணம் பாராயணம் செய்வோமே 

அய்யன் பெற்றோர் புகழை பாடி மகிழ்வோமே


தக தக தக தக தக தங்க கூரை அணிந்தாலும் 

துளசி மாலை அணிந்தாலும்  

அய்யனூர் சபரி மலை......மேல் 

இருப்பது தியான நிலை


அலை அலை அலை அலைகடல் போல பொங்கிவழிந்தாலும்

பக்தர் பொங்கிவழிந்தாலும் 

ஏதோ ஓர் காந்த அலை ஈர்க்கின்ற காந்த மலை


~~~*~~~

~~~ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா~~~

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top