ரோசாப்பூ நந்தவனமே
தங்க ராசாவே கண் வளராய்
கோகில இசைகுயில்தான் உனக்கு
தாலாட்டு பாடுதய்யா
மடிமேல் கண்வளராய் ஐயப்பன்
புலிப்பால் கொடுக்கும் ஐயா
சபரிமலை சுவாமி...
சபரிமலை சுவாமி
கண் திறந்து பார்த்துப்புட்டா
சிரிச்சா முத்துதிரும்
சிந்திச்சா வாழ்வுயரும்
ரோசாப்பூ … ரோசாப்பூ …
ரோசாப்பூ நந்தவனமே
தங்க ராசாவே கண் வளராய்
கோகில இசைகுயில்தான் உனக்கு
தாலாட்டு பாடுதய்யா
என் ஐயா பொன் ஐயா ராசா
என் ஐயா பொன் ஐயப்ப ராசா
என் ஐயா பொன் ஐயா ராசா
என் ஐயா பொன் ஐயப்ப ராசா
அகரத்தில் தொடங்கியே
அனைத்தயும் கத்துக்கிட்டு
பக்தியும் தெரிஞ்சுக்கிட்டு
பகவானை வழிபடைய்யா
ஐயன் படி பதினெட்டும்
உன் வாழ்வில் ஏற்றம் தரும்
அருள்பொங்கும் பார்வை பட்டால்
பெருஞ்செல்வம் பெருகிடுமே
உன்னை பெத்தவர்கள் மகிழ்ந்திட
மத்தவரும் வாழ்த்திடவே
என் கண்ணான கண்மணியே
ஐயப்பனை நினை தினமே
சபரிமலை சுவாமி …..
சபரிமலை சாமி
கண் திறந்து பார்த்துப்புட்டா
சிரிச்சா முத்துதிரும்
சிந்திச்சா வாழ்வுயரும்
ரோசாப்பூ ….. ரோசாப்பூ …..
ரோசாப்பூ நந்தவனமே
தங்க ராசாவே கண் வளராய்
கோகில இசைகுயில்தான் உனக்கு
தாலாட்டு பாடுதய்யா
என் ஐயா பொன் ஐயா ராசாவே
என் ஐயா பொன் ஐயப்ப ராசா
என் ஐயா பொன் ஐயா ராசாவே
என் ஐயா பொன் ஐயப்ப ராசா
கல்லுக்குள்ளே வாழ்ந்திருக்கும்
தேரைக்குமே வாழ்வு தந்து
கண்ணில் என்றும் ஒளிதரும்
அய்யப்பனை வழிபடய்யா
பம்பை ஆறு தீர்த்தமுமே
உந்தன் மேலே தெளித்தேனே
தும்பைப்பூவை போலே உந்தன்
எண்ணங்களும் மலர்ந்திடுமே
அய்யப்பனும் புலிமேலே
வருகின்ற காட்சி பாரடா
நாளை உனக்காகத் தானே
நல்லதுமே செய்வாரடா
சபரிமலை சுவாமி
கண்திறந்து பார்த்துப்புட்டா
சிரிச்சா முத்துதிரும்
சிந்திச்சா வாழ்வுயரும்
ரோசாப்பூ நந்தவனமே
தங்க ராசாவே கண் வளராய்
கோகில இசைகுயில்தான் உனக்கு
தாலாட்டு பாடுதய்யா
மடிமேல் கண்வளராய் ஐயப்பன்
புலிப்பால் கொடுக்கும் ஐயா
சபரிமலை சுவாமி...
சபரிமலை சுவாமி
கண் திறந்து பார்த்துப்புட்டா
சிரிச்சா முத்துதிரும்
சிந்திச்சா வாழ்வுயரும்
ரோசாப்பூ … ரோசாப்பூ …
ரோசாப்பூ நந்தவனமே
தங்க ராசாவே கண் வளராய்
கோகில இசைகுயில்தான் உனக்கு
தாலாட்டு பாடுதய்யா
என் ஐயா பொன் ஐயா ராசா
என் ஐயா பொன் ஐயப்ப ராசா
என் ஐயா பொன் ஐயா ராசா
என் ஐயா பொன் ஐயப்ப ராசா
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
0 comments:
Post a Comment