திருச்செந்தூரின் செந்தில் முருகா பாடல்வரிகள் -Thiruchendoorin Senthil Muruga Lyrics

Kantharaj Kabali
0

Thiruchendoorin Senthil Muruga Lyrics in Tamil

Singer - K.J.Yesudas


திருச்செந்தூரின் செந்தில் முருகா

இசைக் கோவிலில் குடி கொண்டவா

கடலலையோரம் நின்று அருள்செய்பவா

ஓம் சரவணபவ சரணம்


திருச்செந்தூரின் செந்தில் முருகா

ஓம் சரவணபவ சரணம்


தேவர் வணங்கிட சூரர் பொடிபட 

வேலை எறிந்தேகாத்தாய்

மாந்தர் பணிந்தே வேண்டும் வரங்களை

வழங்கியதினம் காத்தாய்

ஞானவேலா ஞானத்தின் தலைவா

ஔவைபோற்றிய மெய்யான தேவா

சிவசக்தி பாலனே வரம் தரவா 


திருச்செந்தூரின் செந்தில் முருகா

ஓம் சரவணபவ சரணம் 


வண்ணமயில் மீதுஏறி

என் எண்ணம் போலே வருவாய்

பன்னிரு விழிப்பார்வையாலே

அருளை அள்ளித் தந்திடுவாய்

செல்வனே இசை நாதத்தின் ஸ்ருதியே

வீரனே வெற்றிவேல் ஏந்தும் சீலனே

ஐங்கரனின் சோதரனே ஆறுதலை தா


திருச்செந்தூரின் செந்தில் முருகா

இசைக் கோவிலில் குடி கொண்டவா

கடலலையோரம் நின்று அருள்செய்பவா

ஓம் சரவணபவ சரணம்


திருச்செந்தூரின் செந்தில் முருகா

ஓம் சரவணபவ சரணம்


ஓம் சரவணபவ சரணம்'

ஓம் சரவணபவ சரணம்

ஓம் சரவணபவ சரணம்

ஓம் சரவணபவ சரணம்

~~~*~~~


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top