ரங்கனை - ஆதி அந்தனை பாடல்வரிகள் - Ranganai Aadhi Andhanai Song Lyrics

Kantharaj Kabali
0

 Ranganai Aadhi Andhanai Song Lyrics

Aandaal Song

திருவாடிப்பூரம் ஆண்டாள் பாடல்


ரங்கனை - ஆதி அந்தனை 

தேடி வந்தனைத்தவர்க்கு திருவருள் புரிய


வண்ணனை - மாய கண்ணனை

அவனின் சிந்தனை நற்கதி அடைய

திருவாய் மொழி அவள்கூறிட

இவ்வையகம் வாழ்ந்திட

திருவாய் மொழி அவள்கூறிட

இவ்வையகம் வாழ்ந்திட


ரங்கனை - ஆதி அந்தனை 

தேடி வந்தனைத் தவர்க்கு திருவருள் புரிய

வண்ணனை - மாய கண்ணனை

அவனின் சிந்தனை நற்கதி அடைய

                                     

தான் சூடிக்கொடுத்து பின் அவன் அணிய...

தான் சூடிக்கொடுத்து பின் அவன் அணிய,

ஆயிரம் வெண்நிலவு முகத்தில் ஜொலிக்க

நாரயணன் நமக்கெனவே உரைத்து

நாளெல்லாம் அவனை உருகி ரசித்து

மங்கைக்கு மட்டுமா விழிக்க அழைத்தாள்

உலகம் விழிக்கவே திருப்பாவை அளித்தாள்

மங்கைக்கு மட்டுமா விழிக்க அழைத்தாள்

உலகம் விழிக்கவே திருப்பாவை அளித்தாள்...


ரங்கனை - ஆதிஅந்தனை 

தேடி வந்தனைத் தவர்க்கு திருவருள் புரிய

வண்ணனை - மாய கண்ணனை

அவனின் சிந்தனை நற்கதி அடைய

திருவாய் மொழி அவள்கூறிட

இவ்வையகம் வாழ்ந்திட

திருவாய் மொழி அவள்கூறிட

இவ்வையகம் வாழ்ந்திட


ரங்கனை - ஆதிஅந்தனை 

தேடி வந்தனைத் தவர்க்கு திருவருள் புரிய

வண்ணனை - மாய கண்ணனை

அவனின் சிந்தனை நற்கதி அடைய

                 

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை

திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

இங்கு இப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்

செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்...


வரதனை வரதராஜனை

அவனை நாடியே நற்கதியினை பெறுவோம்

பரமனை பரந்தாமனை

அவனை பாடியே பிறவி பயனினை அடைவோம்

சூடிக்கொடுத்தவள்

பாடிக் கொடுத்தாள்

அவ்வழி சென்றிடுவோம்

சூடிக்கொடுத்தவள்

பாடிக் கொடுத்தாள்

அவ்வழி சென்றிடுவோம்


வரதனை வரதராஜனை

அவனை நாடியே நற்கதியினை பெறுவோம்

பரமனை பரந்தாமனை

அவனை பாடியே பிறவி பயனினை அடைவோம்


~~~*~~~

     

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top