ஹரி நாராயண ஆரத்தி
Tamil Devotional Song Lyrics
Lord Vishnu Song Lyrics
ஹரி நாராயன, ஹரி நாராயன
ஹரி நாராயன நாராயணா
ஓம் ஹரி நாராயன, ஹரி நாராயன
ஹரி நாராயன நாராயணா
நொந்துடலும் கிழமாகி தளர்ந்த பின் நோயில் நடுங்கிடும் போது
ஜீவ நாடிகள் நைந்திடும்போது
மனம் என்னிடுமோ தெரியாது, தெரியாது,தெரியாது
இன்று சிந்தைக் கசிந்து உன்னை கூவுகின்றேன்
அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா!
நீடுகபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சையடைத்திடும் போது
விக்கி நாவும் குழறிய போது
மனம் எண்ணிடுமோ தெரியாது, தெரியாது,தெரியாது
நான் அன்று கூவிட இன்றழைத்தேன்
எனை ஆண்டருள்வாய் ஹரி நாராயணா!
ஹரி நாராயன, ஹரி நாராயன
ஹரி நாராயன நாராயணா
ஓம் ஹரி நாராயன, ஹரி நாராயன
ஹரி நாராயன நாராயணா
ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடி அடங்கிடும் போது
எந்தன் ஆவி பிரிந்திடும்போது
மனம் எண்ணிடுமோ தெரியாது, தெரியாது,தெரியாது
இன்று நம்பி உனைத்தொழுதே அழைத்தேன்
ஜகன் நாயகனே ஹரி நாராயணா!
உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றமும் ஒவென்று நின்றழும்போது
உயிர் ஓசைகள் ஓய்ந்திடும்போது
மனம் எண்ணிடுமோ தெரியாது, தெரியாது,தெரியாது
இன்று பற்றி உன்னை பணிந்தே அழைத்தேன்
ஆபத்பாந்தவனே ஹரி நாராயணா!
ஹரி நாராயன ஹரி நாராயன
ஹரி நாராயன நாராயணா
ஓம் ஹரி நாராயன ஹரி நாராயன
ஹரி நாராயன நாராயணா
என்பொருள் என்மனை என்றதெல்லாம்
இனி இல்லை என்றாகி விடும்போது
என்பொருள் என்மனை என்றதெல்லாம்
இனி இல்லை என்றாகி விடும்போது
மனம் எண்ணிடுமோ தெரியாது, தெரியாது,தெரியாது
நீ அன்று வரும் பொருட்டின் அழைத்தேன்
அருள் அச்சுதனே ஹரி நாராயணா!
வந்தெம தூதர் வளைந்து பிடித்தெனை
வாவென்றழைத்திடும் போது
வந்தெம தூதர் வளைந்து பிடித்தெனை
வாவென்றழைத்திடும் போது
மனம் எண்ணிடுமோ தெரியாது, தெரியாது,தெரியாது
அந்த அந்தியம் நீ வர இன்றழைத்தேன்
சச்சிதானந்தனே ஹரி நாராயணா
ஹரி நாராயன ஹரி நாராயன
ஹரி நாராயன நாராயணா
ஓம் ஹரி நாராயன ஹரி நாராயன
ஹரி நாராயன நாராயணா
~~~*~~~
0 comments:
Post a Comment