காக்க காக்க கணபதி காக்க பாடல் வரிகள் - Kakka Kakka Ganapathi Kakka Lyrics


Thiruponn Kavacham

Singer - Unnikrishnan


லம்போதரனே அம்பாசுதனே 

ஆனைமுகனே அருள்புரிவாய்

காக்க காக்க கணபதி காக்க

கற்பக நாதா துணை வருவாய்


திருப்பொன்  கவசம் திசைகளை துவக்க

திருநீர் வயிறம் சிந்தையை விளக்க

சந்தனக்காப்பு சதுர்மறை முழக்க

மலரும் கற்பக இறைவா போற்றி

பிள்ளையார் பட்டி வாழ் இறைவா போற்றி

 ️️️️

கலியுகம் காக்கும் கணபதி நாதா

வலம்புரி நாதா அபயம் அபயம்

அபயம் அருளும் இறைவா போற்றி

பிள்ளையார் பட்டி வாழ் இறைவா போற்றி


லம்போதரனே அம்பாசுதனே

ஆனைமுகனே அருள்புரிவாய்

காக்க காக்க கணபதி காக்க

கற்பக நாதா துணை வருவாய்

️️️️️️️️️

சம்போதரனே சிந்தாமணியே

சக்தியின் மகனே அருள் புரிவாய்

காக்க காக்க கணபதி காக்க

கற்பக நாதா துணை வருவாய்


வலம்புரி பார்வை வடபுறம் நோக்க

திருச்செவி இரண்டும் கோரிக்கை கேட்க

இடக்கை வலக்கை இகப்பரம் கணிக்க

மலரும் இறைவா பதமலர் போற்றி ️

பிள்ளையார் பட்டி வாழ் இறைவா போற்றி


மலைபோல் வளரும் மாய கணேசா

நிலையான வாழ்வில் நிம்மதி நீதான்

நிம்மதி அருளும் நிதர்சனம் போற்றி

பிள்ளையார் பட்டி வாழ் இறைவா போற்றி


சம்போதரனே சிந்தாமணியே

      சக்தியின் மகனே அருள் புரிவாய்

காக்க காக்க கணபதி காக்க

கற்பக நாதா துணை வருவாய்

️️️️️️️️️️️️️️

சித்தி விநாயகா  சக்தி விநாயகா

லக்ஷ்மி விநாயகா அருள் புரிவாய்

காக்க காக்க கணபதி காக்க

கற்பக நாதா துணை வருவாய்


ஏந்திய லிங்கம் எமபயம் நீக்க

கற்சில் ஒரு கை கவலைகள் நீக்க

மடக்கிய பாதம் யோகத்தை சொல்ல

மலரும் பதமலர் இறைவா போற்றி 

பிள்ளையார் பட்டி வாழ் இறைவா போற்றி 


தேன்குழல் போலே தினம் உனைச் சூழ்ந்து

தேடுவதோ மன அமைதி மருந்து

அமைதி வழங்கும் இறைவா போற்றி 

பிள்ளையார் பட்டி வாழ் இறைவா போற்றி 


சித்தி விநாயகா சக்தி விநாயகா

லஷ்மி விநாயகா அருள் புரிவாய்

காக்க காக்க கணபதி காக்க

கற்பக நாதா துணை வருவாய்

️️️️️️️

கணாதி பதயே கற்பகத் தருவே

கன்னி மூலனே அருள் புரிவாய் 

காக்க காக்க கணபதி காக்க 

கற்பக நாதா துணை வருவாய் ️


புஜங்கள் இரண்டிலும் ஞானம் புடைக்க

வலம்புரி சுழியோ வருவது உரைக்க

சாற்றிய ஆடை சன்மார்க்கம் உரைக்க

மலரும்  பதமலர் இறைவா  போற்றி ️

பிள்ளையார் பட்டி வாழ் இறைவா போற்றி 


கற்பகம் என்னும் பஞ்சாச் சரமே

ஓதி உணர்ந்திட சுகம் பெறும் மனமே

மெய்சுகம் அருளும் இறைவா போற்றி 

பிள்ளையார் பட்டி வாழ் இறைவா போற்றி 


கணாதி பதயே கற்பகத் தருவே

கன்னி மூலனே அருள் புரிவாய் ️

காக்க காக்க கணபதி காக்க

கற்பக நாதா துணை வருவாய் 

️️

விக்ன விநாயகா வீர விநாயகா

வக்ர குண்டனே அருள் புரிவாய் 

காக்க காக்க கணபதி காக்க

கற்பக நாதா துணை வருவாய் ️


பாண்டிய நாடு பலபடை வீடு

பிள்ளையார் பட்டி எங்கள் தாய் வீடு

தாயும் ஆன கற்பக மூர்த்தி ️

பிள்ளையார் பட்டி வாழ் இறைவா போற்றி ️

        பிள்ளையார் பட்டி வாழ் இறைவா போற்றி 


கழனிகள் தோறும் கணபதி வாசம்

கடைத்தெருவெல்லாம் கற்பக நாதம்

நாத மயமான இறைவா  போற்றி 

பிள்ளையார் பட்டி வாழ் இறைவா போற்றி 


விக்ன விநாயகா வீர விநாயகா

வக்ர குண்டனே அருள் புரிவாய் 

காக்க காக்க கணபதி காக்க 

கற்பக நாதா துணை வருவாய்


அபீஷ்ட வரதா ஹரித்ரநாதா

நந்தா விளக்கே அருள் புரிவாய் 

காக்க காக்க கணபதி காக்க

கற்பக நாதா துணை வருவாய் 


ஊரணிக்கரையில் வேதம் முழக்கம்

உச்சி கோபுர கலசத்தில் ஒலிக்கும்

ஒலி அது கேட்டு உதவிடும் மூர்த்தி

 பிள்ளையார் பட்டி வாழ் இறைவா போற்றி


கற்பகக்கொடி அதன் கைத்தலம்  பிடித்தால்

         நற்கதி உண்டாம் ஊரார் உரைத்தார்

கதிதனை அருளும் கணபதி சரணம் 

பிள்ளையார் பட்டி வாழ் இறைவா சரணம்

       

அபீஷ்ட வரதா ஆனை முகனே

நந்தா விளக்கே அருள் புரிவாய் 

காக்க காக்க கணபதி காக்க

கற்பக நாதா துணை வருவாய் ️️️ 

️️ ️️️

கபிலா விகடா கஜா நந்தனே

ஏக  தந்தனே அருள் புரிவாய் 

காக்க காக்க கணபதி காக்க

கற்பக நாதா துணை வருவாய்


    நந்தீஸ்வரன் தொழும்  தொந்தீஸ்வரனே 

    மயக்கம் அறுக்கும் மருதீசன் மகனே

      நம்பிக்கைத் தரும் தும்பிக்கை மூர்த்தி 

      பிள்ளையார் பட்டி வாழ் இறைவா போற்றி

     பிள்ளையார் பட்டி வாழ் இறைவா போற்றி


~~~*~~~

Notes 

Lyrics for full song not available

Full song 20 mts


About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Ganapathi Devotional Songs Lyrics

.

Vinayagar Devotional Songs Lyrics

.