Amman Devotional Song Lyrics
Singer - L.R.Eswari
தெய்வத்தின் தெய்வம்
எங்கள் வேற்காட்டு மாரி
தெவிட்டாத தீந்தமிழில்
பாடிடுவோம் மாரி
தெய்வத்தின் தெய்வம்
எங்கள் வேற்காட்டு மாரி
தெவிட்டாத தீந்தமிழில்
பாடிடுவோம் மாரி
வேண்டியதை கொடுத்திடுவாய்
வேதவல்லி மாரி
கோமதியே சங்கரியே
குணவதியே மகமாயி
தெய்வத்தின் தெய்வம்
எங்கள் வேற்காட்டு மாரி
வேற்காட்டு மாரி
வேற்காட்டு மாரி
கருமை நிறம் கொண்டவளே
காத்தாயி கருமாரி
கண்ணாயிரம் கொண்டவளே
கண்கண்ட கருமாரி
கருமை நிறம் கொண்டவளே
காத்தாயி கருமாரி
கண்ணாயிரம் கொண்டவளே
கண்கண்ட கருமாரி
ஓயாமல் நின் நாமம்
உரைக்கின்ற உன் மக்கள்
ஓயாமல் நின் நாமம்
உரைக்கின்ற உன் மக்கள்
மாறாத நின் புகழை
பாடிடுவேன் அருள் மாரி
தெய்வத்தின் தெய்வம்
எங்கள் வேற்காட்டு மாரி
வேற்காட்டு மாரியம்மா
வேற்காட்டு மாரி
கல்லாக இருந்தாலும்
கருணை உள்ளம் கொண்டவள் நீ
காணவரும் பக்தருக்கு
காட்சி தரும் தேவி நீ
கல்லாக இருந்தாலும்
கருணை உள்ளம் கொண்டவள் நீ
காணவரும் பக்தருக்கு
காட்சி தரும் தேவி நீ
காலன் கூட உன்னைக்கண்டு
காதவழி சென்றிடுவான்
காலன் கூட உன்னைக்கண்டு
காதவழி சென்றிடுவான்
காத்தாயி கருமாரி
மகமாயி மாகாளி
தெய்வத்தின் தெய்வம்
எங்கள் வேற்காட்டு மாரி
தெவிட்டாத தீந்தமிழில்
பாடிடுவோம் மாரி
தெய்வத்தின் தெய்வம்
எங்கள் வேற்காட்டு மாரி
தெவிட்டாத தீந்தமிழில்
பாடிடுவோம் மாரி
~~~*~~~
0 comments:
Post a Comment