Singer - L.R.Eswari
அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
மங்களம் பொங்க மனதில் வந்திடும்
மாரியம்மா கரு மாரியம்மா
கரு மாரியம்மா
சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி
சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி
மஞ்சளிலே நீராடி நெஞ்கினிலே உறவாடி (2)
தஞ்சமென்று வந்தோமடி கெஞ்சுகிறோம் உன்னையடி
அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
மங்களம் பொங்க மனதில் வந்திடும்
மாரியம்மா கரு மாரியம்மா
கரு மாரியம்மா
நாகத்தில் யீமர்ந்து காட்சி தரும் அலங்காரம்
நாயகியே உன்னைக் கண்டால் நாவில் வரும் ஓங்காரம்
பாசமெனும் மலரெடுத்து ஆசையுடன் மாலை தொடுத்து
நேசமுடன் சூட்ட வந்தோம் மாசில்லாத மாரியம்மா
பாசமெனும் மலரெடுத்து ஆசையுடன் மாலை தொடுத்து
நேசமுடன் சூட்ட வந்தோம் மாசில்லாத மாரியம்மா
அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
மங்களம் பொங்க மனதில் வந்திடும்
மாரியம்மா கரு மாரியம்மா
கரு மாரியம்மா
தென் பொதிகை சந்தனம் எடுத்து
மஞ்சளுடன் குங்குமம் சேர்த்து
பன்னீரும் அபிஷேகம் செய்ய வந்தோம் மாரியம்மா
அன்னையாக நீ இருந்து அருளென்னும் பாலைத் தந்து (2)
இன்பமுடன் வாழ வைப்பாய் ஈஸ்வரியே மாரியம்மா
அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
மங்களம் பொங்க மனதில் வந்திடும்
மாரியம்மா கரு மாரியம்மா
கரு மாரியம்மா
கரு மாரியம்மா
~~~*~~~
0 comments:
Post a Comment