Murugan Devotional Song Lyrics
தமிழ் மொழி காத்த தலைவன் ஐயா
ஞான பழம் கேட்ட குழந்தை ஐயா
அப்பனுக்கு பாடம் சொல்லி
ஆறுபடை ஆட்சி செய்யும்
என் சாமி முருகன் ஐயா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்
சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்
சுப்ரமணியன் சாமி என்பார்
கார்த்திகேயன் என்பார்
சுவாமிநாதன் என்பார்
குக அமுதன் என்பார்
பாலசுப்ரமணியன் என்பார்
கருணாகரன் என்பார்
கதிர் காம கந்தன் என்பார்
கதிர்வேல சாமி என்பார்
சேனாதிபதி என்பார்
கதிர்வேலன் என்பார்
பரமகுரு என்பார்
முத்துக்குமாரன் என்பார்
சூரனை கூறு போட்டவனாம்
சுனாமியை விரட்டி விட்டவனாம்
போகர் கொடுத்த பொக்கிஷமாம்
பஞ்சாமிர்த பிரியனாம்
பக்தமலை சாமியாம்
அப்படி பட்ட முருகன் அவன்
ரொம்ப ரொம்ப சின்னவனாம், சுவாமி
சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்
தமிழ் செல்வன் என்பார்
சத்குண சீலன் என்பார்
மயூர வாகனன் என்பார்
மருதமலை ஆண்டவன் என்பார்
சென்னிமலை சுவாமி என்பார்
சிவன்மலை வேலா என்பார்
ஞான வடிவேலன் என்பார்
வேலாயுத சாமி என்பார்
தேவாதி தேவன் என்வார்
கந்த குரு என்பார்
அவ்வையிடம் ஆசி பெற்றவனாம்
அப்பனுக்கே பாடம் சொன்னவனான்
கார்த்திகை பெண்ணிடம் வளர்ந்தவனாம்
தென் தமிழ் காத்த தெய்வமாம்
மயூர வாகனத்தில் வருபவனாம்
சித்தாதி சித்தனாம்
சக்தி கவசம் கொண்டவனாம்
அப்படி பட்ட முருகன் அவன்
ரொம்ப ரொம்ப சின்னவனாம் முருகன்
சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்
குன்ற குடியான் என்பார்
பழனிமலை நாதன் என்பார்
வடபழனி ஆண்டவன் என்பார்
சரவணன பவன் என்பார்
விமலன் சாமி என்பார்
தண்டாயுதபாணி என்பார்
கலியுக வரதன் என்பார்
வெற்றி வடிவேலன் என்பார்
வீர வடிவேலன் என்பார்
மரகத வண்ணன் என்பார்
ஞான பழம் கேட்டவனாம்
நம்பினோரை நாடுபவனாம்
காவடி பிரியனாம்
ராஜா அலங்காரன் கொண்டவனாம்
ஆண்டியாய் நின்றானாம்
ஆனால் செல்வதை எல்லாம்
கொடுப்பானாம்
அப்படி பட்ட முருகன் அவன்
ரொம்ப ரொம்ப சின்னவனாம் சுவாமி
சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்
நெற்றி கண்ணில் பிறந்தவனே
உன்னை சுத்துதையா மக்கள் ஜனம்
எட்டுத்திக்கும் தமிழ் காத்த
பேரழகா வாரும் ஐயா
சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்
சூரனையே வேரறுத்த
சுப்பிரமணி நீதான் ஐயா
கடல் அலைய விரட்டி விட்ட
செந்தூர் வடிவேலன் ஐயா
சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்
திண்டாட்டமே இல்லாமலே
மக்கள் கொண்டாட்டம வாழ வைக்கும்
பத்திரமா பழநியிலே
உலகை நின்றாளும் ஆண்டவனே
சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்
கந்த சஷ்டி கவசம் படி
உன்னை பிடிச்ச விதி
நொறுக்குமடி
கந்தவேலன் கால புடி
நாம்ம நினைச்சதெல்லாம்
நடக்குமடி
சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்
வா முருகா வேல் முருகா
வா முருகா வேல் முருகா
வா முருகா வேல் முருகா
வேல் முருகா வேல் வேல்
வா முருகா வா வா
வேல் முருகா வேல் வேல்
வா முருகா வா வா
வேல் முருகா வேல் வேல்
வெற்றிவேல் முருகனுக்கு
அந்த வீர வேல் முருகனுக்கு
அரோகரா அரோகரா
அரோகரா…
🚩🚩🐓வெற்றி வேல் வீர வேல்🐓🚩🚩
0 comments:
Post a Comment